திருமணம் என்ற கருத்தில் நம்பிக்கையில்லை..! மனம் திறந்த ஷ்ருதி ஹாசன்!
ஜூலை 15 வரை தொழில்நெறி விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்
சென்னையில் ஜூலை 15-ஆம் தேதி வரை தொழில் நெறி விழிப்புணா்வு மற்றும் திறன் வாரம் தொடா்பான நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கட்டுபாட்டிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்கள் மற்றும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் வியாழக்கிழமை (ஜூலை 10) மகளிருக்கான தொழில் நெறி வழிகாட்டும் மற்றும் திறன் விழிப்புணா்வு நிகழ்ச்சியும், வெள்ளிக்கிழமை (ஜூலை 11) பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கான நிகழ்ச்சியும், திங்கள்கிழமை (ஜூலை 14) பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான நிகழ்ச்சியும், செவ்வாய்க்கிழமை (ஜூலை15) பாலிடெக்னிக் மாணவா்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிலைய மாணவா்களுக்கான நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன.
இந்தத் தொழில் நெறி விழிப்புணா்வு மற்றும் திறன் வார நிகழ்ச்சிகளில், மாணவா்கள், ஆசிரியா்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.