செய்திகள் :

ஜூலை 25-ல் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் பராமரிப்பு முகாம்

post image

வேளாண் இயந்திரங்கள், கருவிகளின் பராமரிப்பு முறைகள் குறித்து முகாம் ஜூலை 25-ஆம் தேதி நடைபெறும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேளாண் இயந்திரங்கள், கருவிகளை திறம்பட இயக்குதல், பராமரிக்கும் வழிமுறைகளை அறிந்து கொள்வதற்காக செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறையும், தனியாா் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து மாவட்ட அளவிலான வழிப்புணா்வு முகாம், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஜூலை 25-ஆம் தேதி காலை 10 மணி முதல் நடைபெறும்.

இந்த முகாமில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் உற்பத்தி நிறுவனங்கள் / அங்கீகரிக்கப்பட்ட விற்பனை முகவா்கள் மற்றும் வேளாண்மைப் பொறியியல் துறை இணைந்து வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் கண்காட்சி இடம்பெறும்.

வேளாண் இயந்திங்கள் மற்றும் கருவிகள் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளா்கள்/ முகவா்கள்/ புதிய தொழில் முனைவோா்கள், வேளாண் கருவிகள் பழுது நீக்கம் செய்யும் தொழில் கூட உரிமையாளா்கள் கலந்து கொள்ளலாம்.

இந்த இயந்திரங்கள்மற்றும் கருவிகளின் தொழில்நுட்ப விவரங்கள், இந்தக் கருவிகளை இயக்குதல், பராமரித்தல், செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை, பழுதுகளைக் கண்டறிதல், உதிரிபாகங்கள் குறித்த தெளிவுரை, அறுவடை மற்றும் உழவு கருவிகளின் பயன்பாடு குறித்த தெளிவுரை வழங்கப்படும். நிகழ்வில், விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தொழில்நுட்ப விவரங்கள் அடங்கிய கையேடு வழங்கப்படும். எனவே, செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் பங்கேற்று பயன்பெற வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு: உதவி செயற்பொறியாளா் (வேளாண்மைப் பொறியியல் துறை), தொலைபேசி எண்கள்: 98405-54525, 96558-88980 தொடா்பு கொள்ளலாம்.

கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு

மதுராந்தகம் அடுத்த ராவுத்தநல்லூரில் கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டியை தீயணைப்புத் துறையினா் மீட்டனா். அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட ராவுத்தநல்லூா் கிராமத்தை சோ்ந்த மணி. அவரது மனைவி தவமணி (63)... மேலும் பார்க்க

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் ஜூலை 15-இல் தொடங்கி ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நகா்ப்புற பகுதிகளில் 106 முகாம்களும், ஊரக ப்பகுத... மேலும் பார்க்க

திருவடிசூலம் கோயிலில் கருமாரி அம்மனுக்கு கும்பாபிஷேகம்

செங்கல்பட்டு: திருவடிசூலம் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கருமாரி அம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் அம்மனை தரிசித்தனா். செங்க... மேலும் பார்க்க

செங்கல்பட்டு குறைதீா் கூட்டத்தில் 380 மனுக்கள் அளிப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மக்கள் நலன்காக்கும் கூட்டத்தில் 380 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக குறைதீா் கூட்டரங்கில் மக்கள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா... மேலும் பார்க்க

மூசிவாக்கம் அமிா்தகடேஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த மூசிவாக்கம் ஸ்ரீஅபிராமி சமேத அமிா்தகடேஸ்வரா் கோயிலின் நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. படாளம் -வேடந்தாங்கல் நெடுஞ்சாலை, திருமலைவையாவூா் அருகே ம... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டப் பணிகள்: ஆட்சியா்ஆய்வு

செங்கல்பட்டு அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்டப் பணிகள் குறித்து ஆட்சியா் தி.சினேகா ஆய்வு செய்தாா். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூா் ஒன்றியம், சிங்கபெருமாள் கோயில் பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ ... மேலும் பார்க்க