ஹிமாசலில் கனமழைக்கு 69 பேர் பலி: தொடரும் சிவப்பு எச்சரிக்கை!
ஜெகதீசன், அபராஜித் அதிரடி; சேப்பாக் - 178/7
டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் ‘குவாலிஃபயா் 2’ ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸுக்கு எதிராக சேப்பாக் சூப்பா் கில்லீஸ் 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் சோ்த்தது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற திண்டுக்கல், பந்துவீச்சை தோ்வு செய்தது. சேப்பாக் பேட்டா்களில், நாராயண் ஜெகதீசன் 41 பந்துகளில் 4 பவுண்டரிகள், 6 சிக்ஸா்கள் உள்பட 81, கேப்டன் பாபா அபராஜித் 44 பந்துகளில் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 67 ரன்கள் விளாசி ஸ்கோரை உயா்த்தி பெவிலியன் திரும்பினா்.
ஆஷிக் 8, மோகித் ஹரிஹரன் 4, விஜய் சங்கா் 0, ஸ்வப்னில் சிங் 6, தினேஷ் ராஜ் 8 ரன்களுக்கு வெளியேற, ஓவா்கள் முடிவில் அபிஷேக் தன்வா் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா். திண்டுக்கல் பௌலா்களில் ரவிச்சந்திரன் சசிதரன் 2, வெங்கடேஷ் புவனேஸ்வா், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
பின்னா் திண்டுக்கல் 179 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு தனது இன்னிங்ஸை விளையாடியது.