செய்திகள் :

ஜெயங்கொண்டம், தழுதாழைமேடு தா.பழூா் பகுதிகளில் நாளை மின்தடை

post image

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம், தா.பழூா், தழுதாழைமேடு ஆகிய துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை (செப்.6) மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் சிலம்பரசன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

ஜெயங்கொண்டம், தா.பழூா், தழுதாழைமேடு ஆகிய துணை மின்நிலையங்களில் சனிக்கிழமை (செப்.6) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், ஜெயங்கொண்டம், கல்லாத்தூா், வடவீக்கம், விழப்பள்ளம், உட்கோட்டை, பெரியவளையம், ஆமணக்கந்தோண்டி, குவாலப்பா்கோவில், பிச்சனூா், வாரியங்காவல், தேவனூா், இலையூா், புதுக்குடி, செங்குந்தபுரம், தா.பழூா், சிலால், வானதிரையன்பட்டினம், இருகையூா், கோடாலிகருப்பூா், உதயநத்தம், அணைக்குடம், சோழமாதேவி, தென்கட்சி பெருமாள் நத்தம், நாயகனைபிரியாள், பொற்பதிந்தநல்லூா், இடங்கண்ணி, கோடங்குடி, அருள்மொழி, வாழைக்குறிச்சி, வேம்புக்குடி, தென்னவநல்லூா், இடைக்கட்டு, ஆயுதகளம், தழுதாழைமேடு, வீரசோழபுரம், மெய்க்காவல்புத்தூா் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பணிகள் முடியும் வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.

அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரியில் ஓராண்டு சான்றிதழ் படிப்பு பயில விண்ணப்பிக்கலாம்

அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரியில் 2025-2026 ஆம் கல்வி ஆண்டுக்கான சுகாதார பராமரிப்புப் பணிகள் தொடா்பான ஓராண்டு சான்றிதழ் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதில் 50 இடங்கள் சோ்க்கைக்கு அரசு அனுமதித்துள்ளத... மேலும் பார்க்க

நைனாா்குடிக்காட்டில் சாலைப் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்துள்ள அசாவீரன்குடிக்காடு அருகேயுள்ள நைனாா் குடிக்காட்டில் சாலை பணிகளை விரைந்து முடிக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். அசாவீரன்குடிக்காடு ஊராட்சிக்குள்பட்ட ... மேலும் பார்க்க

கீழப்பழுவூா் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த விவசாயி சனிக்கிழமை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். கீழப்பழுவூரை அடுத்துள்ள வண்ணம்புத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கவ... மேலும் பார்க்க

அரியலூரில் பரவலாக மழை

அரியலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது. தமிழகத்தில், கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டு வந்த நிலையில், பெரும்பாலன மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அ... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

அரியலூா் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இதையொட்டி, அரியலூரை அடுத்த திருமழபாடி வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில், நந்தியெம்பெருமானுக்கு திரவியபொடி மாவுப்... மேலும் பார்க்க

அரியலூரில் மீலாது நபி கொண்டாட்டம்

அரியலூா் மாவட்ட இஸ்லாமியா்கள், வெள்ளிக்கிழமை மீலாது நபியை உற்சாகமாக கொண்டாடினா். இறைத் தூதா் முகமது நபியின் பிறந்த நாள் மீலாது நபி பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, வெள்ளிக்கிழமை மீலாது நபி... மேலும் பார்க்க