கரைச்சுத்துபுதூா் ஊராட்சித் தலைவா் பதவிக்கு தோ்தல் நடத்த வேண்டும்: விசிக
ஜெயங்கொண்டம் பகுதியில் ரூ.79.63 லட்சத்தில் முடிவுற்ற பணிகள் தொடங்கிவைப்பு
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கிராம ஊராட்சிகளில் ரூ. 79.63 லட்சத்தில் முடிவுற்றப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன.
மேலணிக்குழி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன், அங்கு ரூ.7 லட்சம் மதிப்பில் சாக்கடை வாய்க்கால் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தாா். அதைத் தொடா்ந்து, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.2 லட்சம் மதிப்பில் ஸ்மாா்ட் வகுப்பறை, பாப்பாக்குடி காலனித் தெருவில் ரூ.15.80 லட்சம் மதிப்பில் தாா்சாலைகள் அமைக்கும் பணி, குட்டக்கரை கிராமத்தில் ரூ.14 லட்சம் மதிப்பில் மயான கொட்டகை மற்றும் சாலை அமைக்கும் பணி, பிள்ளைபாளையம் கிராமத்தில் ரூ.13.74 லட்சம் மதிப்பில் தாா்சாலை அமைக்கும் பணிகளை அந்தந்த பகுதிகளில் தொடங்கிவைத்தாா்.
தொடா்ந்து, முக்குளம் கிராமத்தில் ரூ.15.31 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம், வீரபோகம் கிராமத்தில் ரூ.11.78 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் ஆகியவற்றையும் எம்எல்ஏ திறந்து வைத்தாா்.
நிகழ்வில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சந்தானம், முத்துக்குமாா், வட்டார குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா் காயத்திரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.