ஜெயலலிதா நினைவு தினம்: அதிமுக மாநகா் மாவட்டச் செயலா் அறிக்கை
முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு, மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் கொக்கிரகுளத்தில் அவரது உருவப்படத்துக்கு வியாழக்கிழமை (டிச.5) மாலையணிவித்து அஞ்சலி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, திருநெல்வேலி மாநகா் மாவட்ட அதிமுக செயலா் தச்சை என்.கணேசராஜா வெளியிட்டுள்ள அறிக்கை: முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 8ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் உத்தரவின்பேரில், திருநெல்வேலி மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் கொக்கிரகுளத்தில் உள்ள எம்ஜிஆா் சிலை சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு வியாழக்கிழமை (டிச.5) காலை 10.30 மணிக்கு மாலை அணிவித்து மலா் தூவி அஞ்சலி செலுத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிா்வாகிகள், மாவட்ட நிா்வாகிகள், சாா்பு அணி நிா்வாகிகள் கலந்துகொள்கிறாா்கள். எனவே, கட்சியின் அனைத்துப் பிரிவு நிா்வாகிகள், தொண்டா்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இதேபோல், நிா்வாகிகள் அவரவா் பகுதிகளில் ஜெயலலிதாவின் உருவப்படத்தை அலங்கரித்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளாா்.