செய்திகள் :

ஜெய்சங்கர்: "ஒசாமா ஏன் பாகிஸ்தானை பாதுகாப்பானதாக கருதினார்?" - மேற்கு நாடுகளுக்கு நச் கேள்வி!

post image

பிரஸ்ஸல்ஸில் இருந்து ஐரோப்பிய தலைவர்களைச் சந்தித்துவரும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஐரோப்பிய நாடுகள் இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த மாதம் நடந்த பிரச்னையை, அண்டை நாடுகள் இடையேயான எல்லைப் பிரச்னையாக அல்லாமல், தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கையாகப் பார்க்க வேண்டுமென்று வலியுறுத்தினார்.

'இந்தியா - பாகிஸ்தான் பிரச்னை அல்ல'

மேற்குலக மீடியாக்கள் பகல்ஹாம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய நடத்திய ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இரு அணு ஆயுத பலம் கொண்ட நாடுகளுக்கு இடையிலான போட்டியாக காட்சிப்படுத்தியதாக விமர்சித்துள்ளார் ஜெய்சங்கர்.

Jaishankar
Jaishankar

"நான் உங்களுக்கு ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். ஒசாமா பின்லேடன் என்று ஒரு நபர் இருந்தார். அவரும் அவர் சார்ந்தவர்களும் வெஸ்ட் பாயிண்டிற்கு அடுத்துள்ள ஒரு பாகிஸ்தான் இராணுவ நகரத்தில் பல ஆண்டுகள் பாதுகாப்பாக இருக்கலாம் என நினைத்தது ஏன்?... இந்த உலகம் புரிந்துகொள்ள வேண்டும் - இது வெறும் இந்தியா பாகிஸ்தான் பிரச்னை அல்ல. தீவிரவாதத்தைப் பற்றியது. இந்த தீவிரவாதம் மீண்டும் உங்களையும் துரத்தி வரக்கூடும்" எனப் பேசியுள்ளார் ஜெய்சங்கர்.

ரஷ்யா - உக்ரைன் போர் குறித்து...

ஜெய்சங்கரிடம், ரஷ்யா, உக்ரைனை முழுமையாக ஆக்கிரமிப்பு செய்துவரும் சூழலில், மேற்கு நடுகளுடன் இணைந்து ரஷ்யாவுக்கு எதிராக தடைகள் விதிக்காதது ஏன் எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

Jaishankar
Jaishankar

அதற்கு அவர், "இந்தியா போர்களத்தில் இருந்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என நம்பவில்லை... அந்த தீர்வை பரிந்துரைப்பவர்களாகவோ அல்லது தீர்ப்பளிப்பவர்களாகவோ நாங்கள் இல்லை... ஆனால் நாங்கள் அதில் சம்பந்தப்படாதவர்களாகவும் இல்லை. ரஷ்யா, உக்ரைன் இரண்டு நாடுகளுடனும் நாங்கள் நல்ல உறவைக் கொண்டுள்ளோம்." எனப் பேசியுள்ளார்.

மேலும், பாகிஸ்தான் இந்தியா மீது ஆக்கிரமிப்பு செய்தபோது மேற்கு நாடுகள் பாகிஸ்தான் பக்கம் நின்றதையும் சுட்டிக்காட்டினார்.

"ஒவ்வொரு நாடும், இயற்கையாகவே, அதன் சொந்த அனுபவம், வரலாறு மற்றும் நலன்களைக் கருத்தில் கொள்கிறது. இந்தியாவுக்கு ஒரு நீண்டகால குறை இருக்கிறது. நாங்கள் சுதந்திரம் பெற்றபோது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு படைகளை காஷ்மீருக்கு அனுப்பியது. அப்போது அவர்களுக்கு ஆதரவளித்தது யார்? மேற்குலக நாடுகள்." என சுட்டிக்காட்டினார் ஜெய்சங்கர்.

"அப்போது மழுப்பலாகவோ மௌனமாகவோ இருந்துவிட்டு, இப்போது 'சர்வதேச கொள்கைகள் பற்றி ஒரு சிறந்த உரையாடலை நடத்துவோம்' எனக் கூறினால், அவர்களின் சொந்த வரலாற்றைத் திரும்பிப் பார்க்கச் சொல்வதில் நியாயம் இருப்பதாகவே நான் நினைக்கிறேன்" என்று பதிலளித்துள்ளார்.

"அரசியல் இருக்காது என்று நம்பினோம்; ஆனால்..." - முருக பக்தர்கள் மாநாடு குறித்து ஆர்.பி.உதயகுமார்

முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணாவை விமர்சித்து வெளியான வீடியோ சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்துகொண்டது தொடர்பாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீட... மேலும் பார்க்க

`முருகன் மாநாடு' BJP-க்கு எதிராக Stalin கையிலெடுக்கும் 'ஐயனார் அரசியல்!' | Elangovan EXPLAINS

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது. இது முழுமையாக இந்துக்கள் வாக்குகளை அறுவடை செய்து விடும் என நம்பிக்கையோடு லாபக் கணக்கு போடுகிறது பாஜக. அதே நேரத்தில் இந்த மாநாட்டில் த... மேலும் பார்க்க

Iran: அமெரிக்கா இராணுவ தளம் மீது தாக்குதல்; சமாதானத்துக்கு இறங்கி வந்த டிரம்ப்.. ஈரான் பதில் என்ன?

கடந்த 13-ம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் நடத்தியத் தாக்குதல் தற்போது கத்தார் வரை வந்து நிற்கிறது. ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கிறது என்ற குற்றச்சாட்டில் இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுத்துவந்தது. இஸ்... மேலும் பார்க்க

அமெரிக்கா: ரூ.19 ஆயிரம் கோடி விமானம்; நிலத்தை ஊடுருவும் குண்டு - ஈரானை தாக்கிய நவீன ஆயுதங்கள்!

ஈரானின் அணுசக்தி மையங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல் உலகின் அரசியல், பொருளாதார சூழலில் புதிய சூறாவளியை உருவாக்கியிருக்கிறது. இந்த தாக்குதல் உலக நாடுகளால் கவனிக்கப்பட ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளத... மேலும் பார்க்க

"நீட் முழுக்க பணம்தான் விளையாடுகிறது; வினாத்தாள் முதல் ரிசல்ட் வரை எல்லாம் குளறுபடி" - ஸ்டாலின்

மருத்துவ படிப்புகளுக்கு மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்த நீட் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன.பல மாணவர்கள் நீட் தேர்வால் தற... மேலும் பார்க்க