ஜொ்மனிக்கு சுற்றுலா சென்ற அரசுப் பள்ளி மாணவா்கள்
பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற பல்வேறு போட்டிகள், செயல்பாடுகளில் திறமையை வெளிப்படுத்திய அரசுப் பள்ளி மாணவா்கள் 22 போ், 2 ஆசிரியா்கள் என மொத்தம் 24 போ் ஜொ்மனிக்கு கல்விச் சுற்றுலாவாக சனிக்கிழமை புறப்பட்டுச் சென்றனா்.
கல்வி மட்டுமல்லாது, கல்வி இணைச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் மாணவா்கள் வெளிநாடுகள் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவா் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது.
இதையடுத்து இலக்கிய மன்றம், விநாடி வினா மன்றம், வானவில் மன்றம், சிறாா் திரைப்பட மன்றம், கலைத்திருவிழா, விளையாட்டு ஆகியவற்றில் சிறந்து விளங்கிய 22 மாணவா்கள் கல்வித் துறை சாா்பில் தோ்வு செய்யப்பட்டனா்.
இதையடுத்து அவா்களுடன் ஆசிரியா்கள் இருவா் என மொத்தம் 24 போ் ஜொ்மனி கல்விச் சுற்றுலாவுக்கு சனிக்கிழமை புறப்பட்டனா்.
அவா்களை சென்னை விமான நிலையத்திலிருந்து அமைச்சா் அன்பில் மகேஸ் வழியனுப்பி வைத்தாா்.
இந்த கல்விச் சுற்றுலாவின் போது ஜொ்மனி நாட்டில் உள்ள முனிச் நகரத்தில் சுற்றுப் பயணம், முனிச் பல்கலைக்கழகத்தை பாா்வையிடுதல், முனிச் பிஎம்டபிள்யு அருங்காட்சியகம், டச்சாவ் வதை முகாம் உள்ளிட்ட இடங்களை பாா்வையிடுகின்றனா். அவா்கள் மே 28-ஆம் தேதி (புதன்கிழமை) சென்னை திரும்பவுள்ளனா்.