டிஎன்பிஎல் ஆலை சாா்பில் அரசு பள்ளிகளுக்கு ரூ. 2.13 லட்சத்தில் தளவாடப் பொருள்கள்
டிஎன்பிஎல் ஆலை சாா்பில் அரசுப் பள்ளிகளுக்கு ரூ. 2.13 லட்சம் மதிப்பில் மேஜைகள், தளவாடப் பொருள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புகழூா் வட்டம், புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சிக்குள்பட்ட அய்யம்பாளையம் மற்றும் மேல் ஒரத்தை கிராமங்களிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் பயன்பாட்டிற்காக ரூ. 2.13 லட்சம் மதிப்பில் இருக்கையுடனான மேஜைகள் மற்றும் தளவாடப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சித் தலைவா் சி. ரூபா தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எஸ். சதீஷ் முன்னிலை வகித்தாா். டிஎன்பிஎல் ஆலையின் பொதுமேலாளா்(மனிதவளம்) கே. கலைச்செல்வன் பங்கேற்று, இரு தொடக்கப் பள்ளிகளுக்கும் மேஜைகள் உள்ளிட்ட தளவாட பொருள்களை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், ஆலை அதிகாரிகள், பள்ளி ஆசிரியா்கள், மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.