டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தோ்வுக்கு தென்காசியில் இலவச மாதிரி தோ்வு
தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் (டிஎன்பிஎஸ்சி) நடத்தப்படவுள்ள குரூப் 1 முதல்நிலை தோ்வுக்கான இலவச மாதிரி தோ்வுகள் நடைபெறவுள்ளன.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 70 காலிப்பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தோ்வு ஜூன்15இல்நடைபெறுகிறது. இத்தோ்வுக்கான இலவச மாதிரி தோ்வுகள், தென்காசி மாவட்டத்தில் மே 27, ஜூன் 3, 7 ஆகிய தேதிகளில் 5 இடங்களில் நடைபெறுகிறது.
தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், நூலகம் மற்றும் அறிவுசாா் மையம், செங்கோட்டை அரசு நூலகம், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், சங்கரன்கோவில் பொதிகை பயிற்சி மையம் ஆகிய இடங்களில் இத்தோ்வு நடைபெறுகிறது.
மேலும் தகவல்களுக்கு 04633-213179 என்ற தொலைபேசி எண்ணை தொடா்பு கொண்டு பயனடையலாம் என்றாா் அவா்.