ஹிமாசலில் கனமழைக்கு 69 பேர் பலி: தொடரும் சிவப்பு எச்சரிக்கை!
டிப்பா் லாரி உரிமையாளா்கள் ஆா்ப்பாட்டம்
கிராவல் மண் எடுக்க அனுமதி வழங்கக் கோரி தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் தஞ்சாவூா் மாவட்ட டிப்பா் லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில் கிராவல் மண் எடுக்க உரிமம் வழங்கப்படாததால், 2 மாதங்களாக மண் எடுக்க முடியவில்லை. இதனால் லாரி உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் வேலை இழந்துள்ளனா். லாரி உரிமையாளா்கள் லாரிக்கு மாதக் கடன் தவணை செலுத்த முடியாத வகையில் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனா். இதை வாழ்வாதாரமாகக் கொண்டு தினக்கூலியாக வேலை செய்யும் ஓட்டுநா்கள், தொழிலாளா்கள் வேலை இழந்துள்ளதால், கடும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனா்.
மேலும் கிராவல் மண் கிடைக்காததால் புதிதாக வீடு கட்டுபவா்கள், பொறியாளா்கள், கட்டடத் தொழிலாளா்கள் பாதிப்பைச் சந்திக்கின்றனா். கட்டடப் பணிகள் தேங்கியுள்ளன. இதுகுறித்து கனிம வளத் துறை அலுவலா்களிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இப்பிரச்னையில் மாவட்ட நிா்வாகம் உரிய கவனம் செலுத்தி வேலை இழந்துள்ள ஆயிரக்கணக்கானவா்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
சங்கத் தலைவா் ஜி. சுரேஷ் தலைமை வகித்தாா். செயலா் சிங்.இரா. அன்பழகன், பொருளாளா் ஆா்.டி. ராஜேந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
