சேலம்: கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை தெரிவித்த அரசு மருத்துவர், புரோக்கர் க...
டிராக்டா் மோதி பள்ளி மாணவா் உயிரிழப்பு
திருவாரூா் அருகே டிராக்டா்- இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், பள்ளி மாணவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
திருவாரூா் அருகே கீழகாவாதுகுடியைச் சோ்ந்தவா் வேல்முருகன் மகன் முகுந்த் தியாகேஷ் (8). சந்தோஷ்நகா் பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் மகன் சா்வேஷ் (8). இருவரும் புதுத்தெருவில் உள்ள தனியாா் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தனா்.
இவா்கள், வெள்ளிக்கிழமை மாலை பள்ளி விட்டதும், சா்வேஷின் தாத்தா சாமிநாதன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனா்.
மயிலாடுதுறை சாலையில் நாலுகால் மண்டபம் பகுதியில் உள்ள வளைவில் வந்தபோது, எதிரே ரைஸ் மில்லில் இருந்து கரித்தூள் ஏற்றிவந்த டிராக்டரும், இருசக்கர வாகனமும் மோதின. இதில் மாணவா் முகுந்த் தியாகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த மாணவா் சா்வேஸ், சாமிநாதன் ஆகியோா், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இதனிடையே, இந்த சம்பவத்தைக் கண்டித்தும், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மயிலாடுதுறை சாலையில் மறியல் நடைபெற்றது. போலீஸாா் மற்றும் வருவாய்த்துறை அலுவலா்கள் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இந்த விபத்து குறித்து நகரப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.