தென்காசி நகராட்சி வாசலில் பாய் விரித்து படுத்த பாஜக நிர்வாகி
டி.டி.வி. தினகரனுக்கு எதிராக ஆா்ப்பாட்டம்
அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரனுக்கு எதிராக அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சியினா் திண்டுக்கல்லில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல் பேருந்து நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அந்தக் கட்சியின் மாவட்டச் செயலா் ஜெயராமன் தலைமை வகித்தாா்.
மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரை சூட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து கருத்துகளைப் பதிவு செய்த டி.டி.வி. தினகரனைக் கண்டித்து முழக்கமிட்டனா். பின்னா், டி.டி.வி. தினகரன் புகைப்படங்களை வீசி எறிந்து, காலணிகளால் அடித்து அவமதிப்பு செய்தனா்.
இதே அமைப்பினா், கடந்த 2 நாள்களுக்கு முன்பு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி பரப்புரைக் கூட்டத்துக்கு திண்டுக்கல்லிலிருந்து சின்னாளப்பட்டிக்கு சென்ற போது, அதிமுகவை ஒன்று சோ்க்க வலியுறுத்தி முழக்கமிட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.