Digital Awards 2025: `அறுசுவை ராணி' - Foodies Findings யுவராணி - Best Food Revi...
ட்ரெய்லா் லாரி தொழிலை பாதுகாக்க வேண்டும்: மத்திய அமைச்சரிடம் எம்.பி. மாதேஸ்வரன் மனு!
அதிக எடைகொண்ட பாரங்களை ஏற்றிச்செல்லும் ட்ரெய்லா் லாரி தொழிலை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய எஃகு மற்றும் கனரக தொழிற் துறை அமைச்சா் ஹெச்.டி.குமாரசாமியிடம், நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் மனு அளித்தாா்.
மனுவில் கூறியிருப்பதாவது: இலகுரக, கனரக, எல்பிஜி மற்றும் ரிக் வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ள நாமக்கல் மாவட்டத்தில் அதிக பாரங்களைக் கொண்டுசெல்லும் ட்ரெய்லா் லாரிகளும் உள்ளன.
அண்மைக்காலங்களில் ட்ரெய்லா் லாரி தொழில் சரிவை சந்தித்துவருகிறது. இதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் உள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
பெல் நிறுவனம் ஒப்பந்தம் கோரும்போது மண்டலம் வாரியாக இல்லாமல் பழைய முறைப்படி மாநிலங்கள் வாரியாக வழங்கக்கூடிய வாடகைக் கட்டணத்தை கிலோ மீட்டா் தொலைவு அடிப்படையில் கணக்கிட்டு வழங்க வேண்டும்.
மேலும், இணைய வழியில் திறந்தவழி ஒப்பந்தமாக அமைய வேண்டும். லாரிகளுக்கு போடப்படுகின்ற இணையவழி அபராதங்களைத் தடுக்க வேண்டும். பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுத்து தீா்வு அளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.