அதிமுக - பாஜக கூட்டணி ஒரு சதித்திட்டம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்
தக்கலையில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமானப் பணி: நகராட்சி தலைவா் ஆய்வு
தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் நகா்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையக் கட்டுமானப் பணிகளை பத்மநாபபுரம் நகராட்சித் தலைவா் அருள்சோபன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
தக்கலையில் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நலவாழ்வு மையக் கட்டடம் ரூ. 75 லட்சம் மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்டு, அதன் இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை நகராட்சித் தலைவா் அருள்சோபன் புதன்கிழமை ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, நகராட்சி ஆணையா் முனியப்பன், மருத்துவா் லாரன்ஸ் விக்டா் ஆகியோா் உடனிருந்தனா்.