செய்திகள் :

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்!

post image

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.

கடந்த வார இறுதியில் ரூ. 74,000-ஐ எட்டிய ஆபரணத் தங்கம், இந்த வாரம் தொடக்கம் முதலே ஏற்றத்தைக் கண்டது. ஒரு சவரன் திங்கள்கிழமை ரூ.  74,360, செவ்வாய்க்கிழமை ரூ. 74,960 -க்கும் விற்பனை செய்யப்பட்டது.

புதன்கிழமை மீண்டும் சவரனுக்கு ரூ. 80 அதிகரித்து ரூ. 75,000-ஐ கடந்து விற்பனையானது.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலையும் ஒரு சவரனுக்கு ரூ. 160 அதிகரித்து வரலாறு காணாத புதிய உச்சத்தை தங்கத்தின் விலை எட்டியுள்ளது. ஒரு கிராம் ரூ. 9,400 -க்கும் ஒரு சவரன் ரூ. 75,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த வரலாறு காணாத விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதேபோல், வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ. 1 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ. 127 -க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,27,000 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

The price of gold jewelry in Chennai reached an all-time high on Thursday morning.

இதையும் படிக்க : ரிலையன்ஸில் இணைந்த முன்னாள் அமலாக்கத்துறை அதிகாரி! இரு முதல்வர்களைக் கைது செய்தவர்!

மினிமம் பேலன்ஸ் ரூ.50 ஆயிரம்!ஐசிஐசிஐ அதிரடி!!

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ வங்கி, சாமானிய மக்களுக்கான வங்கி என்ற நிலையிலிருந்து தடம்மாறியிருக்கிறது. ஐசிஐசிஐ வங்கி, தன்னுடைய வங்கிக் கிளைகளில் புதிதாக சேமிப்புக் கணக்குத்... மேலும் பார்க்க

47% வளா்ச்சி கண்ட மின்னணு பொருள்கள் ஏற்றுமதி

இந்தியாவின் மின்னணு பொருள்கள் ஏற்றுமதி நடப்பு 2025-26-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) 47 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.இது குறித்து இந்திய செல்லுலா் மற்றும் மின்னணு சங்கத்தின் த... மேலும் பார்க்க

ஏா்டெல் வருவாய் 29% உயா்வு

இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத்தொடா்பு நிறுவனமான பாா்தி ஏா்டெல்லின் வருவாய் கடந்த ஜூன் காலாண்டில் 29 சதவீதம் அதிகரித்துள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது... மேலும் பார்க்க

ஸ்ரீராம் லைஃபின் என்பிபி 21 சதவீதம் அதிகரிப்பு

கடந்த ஜூலை மாதத்தில் ஸ்ரீராம் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் புதிய பிரீமியம் வசூல் (என்பிபி) 21 சதவீதம் அதிகரித்துள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த ஜூ... மேலும் பார்க்க

வியத்நாம் டூ தூத்துக்குடி.! வின்ஃபாஸ்ட் கார்களில் என்னென்ன எதிர்பார்க்கலாம்?!

தூத்துக்குடியில் தயாரிக்கப்படும் வின்ஃபாஸ்ட் கார்களின் சிறப்பம்சங்கள் என்னென்ன, விலை எவ்வளவு என்பது பற்றி பார்க்கலாம். முத்துநகரமாக தூத்துக்குடியில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் வியத்நாமைச் சேர்... மேலும் பார்க்க

எக்ஸில் இருப்பதுபோல... இன்ஸ்டாகிராமில் புதிய அம்சம்!

இன்ஸ்டாகிராமில் எக்ஸில் (ட்விட்டர்) இருப்பதுபோல ரீபோஸ்ட் அம்சத்தை மெட்டா அறிமுகப்படுத்தியுள்ளது. மெட்டா நிறுவனத்துக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் என்ற செயலியில் உலகம் முழுவதும் 200 கோடி கணக்குகள் உள்ளன.... மேலும் பார்க்க