தங்கம் விலை 2 நாள்களில் ரூ.1200 குறைவு: இன்றைய நிலவரம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை காலை சவரனுக்கு ரூ.680 குறைந்துள்ளது.
இந்த மாதத் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்துவருகிறது. அதன்படி, இந்த வாரத்தின் முதல் நாளான நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை குறைந்திருந்த நிலையில், இன்றும் (ஆக.12) கிராமுக்கு ரூ.85 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.9,295-க்கு விற்பனையாகிறது.
அதேசமயம் சவரனுக்கு ரூ.680 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.74,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த இரண்டு நாள்களில் மட்டும் தங்கத்தின் விலை ரூ.1240 குறைந்துள்ளதால், இல்லத்தரசிகளும், தங்க முதலீட்டாளர்களும் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.
வெள்ளி விலையில் கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.126-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 1,26,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.