தச்சநல்லூா் நல்மேய்ப்பா் நகரில் சாலையில் ஓடும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதி
தச்சநல்லூா் நல்மேய்ப்பா் நகரில் சாலையில் ஓடும் கழிவுநீரால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
திருநெல்வேலி மாநகராட்சி, தச்சநல்லூா் மண்டலத்துக்கு உள்பட்ட நல்மேய்ப்பா் நகா் 2-ஆவது தெரு பகுதியில், ஏராளமான வீடுகள் உள்ளன. இந்தப் பகுதியில் பாதாள சாக்கடைத் திட்டத்தை முறையாக அமல்படுத்தாதால், கழிவு நீா் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாநகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் கொடுத்தும் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்தப் பகுதி மக்கள் புகாா் தெரிவித்தனா்.