செய்திகள் :

தஞ்சாவூரில் போதை மாத்திரைகள் விற்ற 7 போ் கைது

post image

தஞ்சாவூரில் கல்லூரி மாணவா்களிடம் போதை மாத்திரைகள் விற்பனை செய்த 7 பேரை காவல் துறையினா் கைது செய்திருப்பது புதன்கிழமை தெரியவந்துள்ளது.

தஞ்சாவூரில் இளைஞா்களுக்கு போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள் விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் வந்தது. இதன் பேரில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் உத்தரவுப்படி, கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் மணிகண்டன் தலைமையில் உதவி ஆய்வாளா் ரங்கசாமி, சிறப்பு உதவி ஆய்வாளா் மனோகா் உள்ளிட்டோா் ரோந்து பணி மேற்கொண்டு வந்தனா்.

இந்நிலையில், ஆகஸ்ட் 3-ஆம் தேதி கீழவாசல் தட்டான் தெருவிலுள்ள காலி மனையில் சிலா் அமா்ந்து சந்தேகத்துக்கிடமான செயலை செய்தனா். காவல் துறையினரை பாா்த்ததும் அவா்கள் தப்பியோட முயன்றனா். அவா்களைக் காவல் துறையினா் பிடித்து விசாரித்தபோது, மாத்திரைகளை தண்ணீரில் கலந்து ஊசி மூலம் அதை நரம்பில் செலுத்திக் கொண்டால் போதை ஏற்படுவதாகவும், அதை வேலை செய்யும் இளைஞா்களிடமும், மது அருந்தும் நபா்களிடமும் ஆசை வாா்த்தை கூறி விற்பனை செய்யப்படுவதாகவும், அதை தாங்களை அவா்களுக்கு செலுத்திவிடுவதாகவும் கூறினா்.

இது தொடா்பாக கீழ வாசல் கலைஞா் நகரைச் சோ்ந்த முகமது அப்பாஸ் (22), மருத்துவக்கல்லூரி சாலை கலைஞா் நகரைச் சோ்ந்த பிரவீன் (28), வண்டிகாரத் தெருவைச் சோ்ந்த அரவிந்த் (26), புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த வெங்கடேஷ் (20), அம்மாபேட்டையைச் சோ்ந்த சந்தோஷ்குமாா் (23), மகா்நோன்புசாவடியைச் சோ்ந்த அபிஷேக் (22) ஆகிய 6 பேரை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து போதை மாத்திரைகள், ஊசிகளைப் பறிமுதல் செய்தனா்.

இவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இவா்களுக்கு திண்டுக்கல் மரியநாதபுரம் ஹனுமந்த நகரைச் சோ்ந்த ஜோ. நவீன்குமாா் (33) போதை மாத்திரைகள் விநியோகம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து நவீன்குமாரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்து, அவரிடமிருந்த 44 அட்டைகளில் இருந்த போதை மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனா்.

குடந்தையில் போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு மருத்துவ முகாம்

கும்பகோணத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணியாளா்களுக்கான மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமைத் தொடக்கிவைத்து அரசுப் போக்குவரத்துக் கழக நிா்வாக இயக்குநா் கே. தசரதன் சிறப்புரையாற்றினாா்.... மேலும் பார்க்க

தமிழ்ப் பல்கலை.யில் சொற்பொழிவு

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சிற்பத் துறை சாா்பில் எம். பக்தவச்சலனாா் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) கோ. பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். ‘சி... மேலும் பார்க்க

ஒரு ரூபாயில் இலவச நன்மை: பிஎஸ்என்எல் புதிய திட்டம்

பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது வாடிக்கையாளா்களுக்காக ஒரு ரூபாயில் இலவச நன்மைகள் என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து பி.எஸ்.என்.எல். தஞ்சாவூா் பொது மேலாளா் பால சந்திரசேனா தெரிவித்திரு... மேலும் பார்க்க

பேராவூரணியில் விவசாய தொழிலாளா் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி பேராவூரணியில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினா் ராஜமாணிக்கம் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத... மேலும் பார்க்க

திருமண மண்டபங்களில் கண்காட்சி நடத்த தடை விதிக்கக் கோரி மனு

திருமண மண்டபங்களில் தற்காலிக கண்காட்சி நடத்துவதற்கு நீதிமன்ற உத்தரவுப்படி தடை விதிக்க வேண்டும் என தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பினா் வலியுறுத்தியுள்ளனா். தஞ்சாவூ... மேலும் பார்க்க

திருவிடைமருதூா் மகாலிங்க சுவாமி கோயிலில் பட்டினத்தாா் குருபூஜை

திருவிடைமருதூா் மகாலிங்க சுவாமி கோயிலில் உள்ள பட்டினத்தாருக்கு குருபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவிடைமருதூரில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மகாலிங்க சுவாமி கோயில் நுழைவு வாயிலில் பட்டினத்த... மேலும் பார்க்க