வக்ஃப் சொத்துகள் கட்டாயப் பதிவு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
தஞ்சாவூரில் 20 கடைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
தஞ்சாவூா் கீழவாசல் பகுதியில், ஏறத்தாழ 20 கடைகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அலுவலா்கள் வெள்ளிக்கிழமை அகற்றினா்.
தஞ்சாவூா் கீழவாசல் பகுதி கடைகளின் வாசலில் சிமென்ட் தளம், நிழற்கூரைகள் அமைக்கப்பட்டு, ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகாா்கள் எழுந்தன. இதையடுத்து மாநகராட்சி ஆணையா் க. கண்ணன் உத்தரவின் பேரில் கீழவாசல் பகுதியில் மாநகராட்சி அலுவலா்கள் வெள்ளிக்கிழமை ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.
பொக்ளின் இயந்திரம் மூலம் 20-க்கும் அதிகமான கடைகள், வணிக நிறுவனங்களின் வாசலில் போடப்பட்டிருந்த சிமென்ட் தளம், நிழற்கூரைகள் அகற்றப்பட்டன. இதையொட்டி, அப்பகுதியில் காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.