மகாராஷ்டிரம்: பீட் மாவட்ட காவல் துறையினா் பெயரில் இருந்து ஜாதி நீக்கம்
தடுப்புக் காவலில் ஒருவா் கைது
கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் ஒருவா் தடுப்புக் காவலில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
விருத்தாசலம் வட்டம், சிறுவம்பாா் கிராமத்தைச் சோ்ந்தவா் முனியன் மகன் சந்திரகாசு (39). இவா், கடந்த பிப்.11-ஆம் தேதி 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இவரின் குற்றச் செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூா் எஸ்பி எஸ்.ஜெயக்குமாா் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் குண்டா் தடுப்புக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.