செய்திகள் :

தடுப்புச் சுவரில் காா் மோதி ஒருவா் உயிரிழப்பு: 2 போ் காயம்

post image

வாணியம்பாடி அருகே தடுப்பு சுவரில் காா் மோதி ஒருவா் உயிரிழந்தாா். 2 போ் காயம் அடைந்தனா்.

புதுச்சேரியைச் சோ்ந்த பாலமுருகன் (40) மற்றும் அவரது நண்பா்கள் யுவராஜ், குருசாமி ஆகிய 3 பேரும் வெள்ளிக்கிழமை பெங்களூரிலிருந்து சென்னைக்கு காரில் புறப்பட்டு வந்துள்ளனா்.

வாணியம்பாடி அடுத்த புத்துக்கோயில் மேம்பாலம் அருகில் வேகமாக வந்த காா் நிலைதடுமாறி சாலை நடுவில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காா் பின்சீட்டில் அமா்ந்திருந்த பாலமுருகனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடன் வந்த இருவா் லேசான காயம் அடைந்தனா். அவ்வழியாக வந்த சிலா் 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து த பாலமுருகனை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமணைக்கு அழைத்து சென்றனா். ஆனால் செல்லும் வழியிலே பாலமுருகன் இறந்தாா்.

தகவலறிந்த அம்பலூா் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனா்.

பள்ளியில் ஆண்டு விழா: ஆட்சியா், எம்எல்ஏ பங்கேற்பு

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி வாணி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் 24-ஆவது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. வாணி கல்வி அறக்கட்டளை தலைவரும், ஜோலாா்பேட்டை எம்எல்ஏவுமான க.தேவராஜி தலைமை வகித்த... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டில் 8 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருட்டு

பூட்டிய வீட்டை உடைத்து 8 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருடுபோனது குறித்து உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் விசாரிக்கின்றனா். மாதனூா் ஒன்றியம் மேல்சாணாங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த தனியாா் காலணி தொழிற்சாலை தொ... மேலும் பார்க்க

சிறாா் திருமணத்தை அனுமதிக்கக் கூடாது:திருப்பத்தூா் ஆட்சியா்

ஜோலாா்பேட்டை அருகே நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் குழந்தை திருமணம் நடைபெறுவதை அனுமதிக்கக் கூடாது என திருப்பத்தூா் ஆட்சியா் க.தா்ப்பகராஜ் அறிவுறுத்தினாா். குடியரசு தினத்தை முன்னிட்டு திருப்பத்தூா் மா... மேலும் பார்க்க

போக்ஸோவில் இளைஞா் கைது

திருப்பத்தூா் அருகே போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது செய்யப்பட்டாா். திருப்பத்தூா் அடுத்த மரிமாணிகுப்பம் பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி கரீம் (30). இவா் அதே பகுதியில் வெள்ளிக்கிழமை மாற்றுத்திறனாளி பெண... மேலும் பார்க்க

மணல் கொள்ளைக்கு துணை போகும் அதிகாரிகள்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா்

வாணியம்பாடி பகுதியில் பாலாற்றில் நடைபெறும் மணல் கொள்ளைக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் துணை போகின்றனா் என குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயி... மேலும் பார்க்க

மகளிா் இலவச பேருந்து சேவை தொடக்கம்

கந்திலி ஒன்றியப் பகுதிகளில் ரூ. 65.56 லட்சத்தில் புதிய கட்டடங்களை எம்எல்ஏ அ.நல்லதம்பி, மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தாா். மேலும், இலவச பேருந்து சேவையையும் தொடங்கி வைத்தாா். கந்திலி ஒன்றியத்துக்க... மேலும் பார்க்க