தனியாகப் போராடும் தளபதி..! ஜடேஜாவுக்குக் குவியும் வாழ்த்துகள்!
இங்கிலாந்திடம் குறைந்த ரன்களில் இந்தியா தோற்றாலும் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவின் போராட்ட குணத்துக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
இந்தியா - இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி கடைசி நாளில் 12 ரன்களில் த்ரில் வெற்றி பெற்றது.
இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணிக்கு 193 ரன்கள் தேவையான நிலையில் அதை சேஸ் செய்ய முடியாவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
ஜடேஜா தனியாளாகப் போராடி 181 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
மற்ற வீரர்கள் ஆட்டமிழந்ததால் இந்திய அணி தோல்வியைத் தழுவியது.
இந்த ஒரு போட்டி மட்டுமல்ல, இதுமாதிரி பல போட்டிகளில் ஜடேஜா தனியாக நின்று விளையாடியுள்ளார்.
இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஜடேஜாவைப் போர்வீரன் எனப் பாராட்டி வருகிறார்கள்.
சிஎஸ்கே அணி தனது சமூக வலைதளப் பக்கத்தில் தளபதி ஜடேஜா எனக் கூறுவதற்கான காரணம் என அவர் அடித்த ரன்களை பட்டியலிட்டுள்ளது.