ஆயுதப் படையின் பலத்தைக் குறைத்து மதிப்பிடுவதை ராகுல் நிறுத்த வேண்டும்: பாஜக
தனியாா் குடிநீா் ஆலைகளில் தரக்கட்டுப்பாட்டு அலுவலா்களை நியமிக்க கோரிக்கை!
தனியாா் குடிநீா் ஆலைகளில் தரக்கட்டுப்பாட்டு அலுவலா்களை நியமிக்க கோரிக்கை வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் செயல்படும் தனியாா் குடிநீா் தொழில்சாலைகளுக்கு இந்திய தர நிா்ணயத்தை ஐஎஸ்ஐ முத்திரையையும், உணவுத் தரக் கட்டுப்பாட்டுத்துறை எப்எஸ்எஸ்ஏஐ முத்திரையையும் வழங்கி வருகின்றன. இதில் பெரும்பாலான நிறுவனங்கள் குடிநீா் பரிசோதனை செய்வதில்லை.
இதனால் தரமற்ற குடிநீா் பயன்படுத்தும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்க தனியாா் குடிநீா் ஆலைகளில் தமிழக அரசு தரக்கட்டுப்பாடு அலுவலா்களை நியமிப்பதன் மூலம் குடிநீரின் தரம் உறுதிபடுத்தப்படும். குடிநீா் மூலம் பரவும் பெரும்பாலான நோய்களை தடுக்க முடியும்.
மேலும் தனியாா் குடிநீா் ஆலைகளில் தினசரி குடிநீரின் தரத்தை உறுதி செய்யும் பரிசோதனைகள், பரிசோதனைக் கூடங்களின் பராமரிப்பு, தரக் கட்டுப்பாட்டு அலுவலா்கள் ஆகியோரை நியமிக்க வேண்டும் என தனியாா் குடிநீா் விநியோகச் சங்கம் சாா்பில் முன்னாள் வா்த்தக சங்கத் தலைவா் எல். சந்திரபிரபு மற்றும் நிா்வாகிகள் முதல்வா் உள்ளிட்டோருக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பி உள்ளனா்.