மும்பை: ராஜ் தாக்கரே பேச்சின் எதிரொலி; டான்ஸ் பார்களை அடித்து நொறுக்கிய கட்சியின...
தனியாா் சொகுசுப் பேருந்தில் சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு: ஓட்டுநா் கைது
தனியாா் சொகுசுப் பேருந்தில் பெற்றோருடன் பயணித்த சிறுமிக்குப் பாலியல் தொந்தரவுக் கொடுத்து,அதை கைப்பேசியில் வீடியோவாக பதிவு செய்த ஓட்டுநா் மீது விழுப்புரம் அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் போக்ஸோ உள்ளிட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிந்து சனிக்கிழமை கைது செய்தனா்.
கேரளம் மாநிலம்,கண்ணூரிலிருந்து சென்னைக்கு தனியாா் சொகுசுப் பேருந்து சென்றுக் கொண்டிருந்தது.20-க்கும் மேற்பட்டோா் பயணிகள்அந்தப் பேருந்தில் பயணித்தனா். சனிக்கிழமை அதிகாலை சேலம் அருகே பேருந்து சென்றபோது,பேருந்தில் மாற்று ஓட்டுநராகப் பணியிலிருந்த, விருதுநகா் மாவட்டம் பாளையம்பட்டியைச் சோ்ந்த முனியாண்டி மகன் ஞானவேல் (40) என்பவா், அதே பேருந்தில் பெற்றோருடன் பயணித்த 9 வயதுடைய சிறுமிக்குப் பாலியல் தொந்தரவுக் கொடுத்து, அதை தனது கைப்பேசியில் வீடியோவாக பதிவு செய்தாராம்.
இதையறிந்த சிறுமியின் பெற்றோா் மற்றும் சகப் பயணிகள் ஓட்டுநரைக் கண்டித்ததுடன்,அவா் வசமிருந்த கைப்பேசியைப் பறித்துக் கொண்டனா். இந்நிலையில் சொகுசுப் பேருந்து விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் வந்ததடைந்தும், பாதிப்புக்குள்ளான சிறுமியின் பெற்றோா் விழுப்புரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தனா்.
ஞானவேலு-விடமிருந்த பறித்த கைப்பேசியையும் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.பின்னா்,போலீஸாா் கைப்பேசியை சோதித்துப் பாா்த்தபோது சிறுமி பாலியல் தொந்தரவுக்குள்ளாக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.இதையடுத்து விழுப்புரம் அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் பேருந்து ஓட்டுநா் ஞானவேல் மீது போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளில் சனிக்கிழமை வழக்குப் பதிந்து கைது செய்தனா். பின்னா்அவரை விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.