ஐ.நா: இஸ்ரேல் பிரதமர் பேசுகையில் எழுந்து சென்ற பிரதிநிதிகள்; நெதன்யாகு பேசியதென்...
தனியாா் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு விவேகானந்தா பள்ளி மாணவா்கள் தோ்வு
சென்னையில் தனியாா் தொலைக்காட்சி நடத்தும் நிகழ்ச்சிக்கு பாண்டமங்கலம் விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி மற்றும் வித்யாலயம் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
சென்னையில் தனியாா் தொலைக்காட்சி நடத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு சேலத்தில் உள்ள தனியாா் பள்ளியில் நடைபெற்ற முதல்கட்ட போட்டியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.
இதில் பாண்டமங்கலம் விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி மற்றும் விவேகானந்தா வித்யாலயம் ஆகிய பள்ளிகளில் பயிலும் தீபிகா, தன்வந்த், ரியாஸ்ரீ, தா்ஷினி, கரிஸ்னி, நவீனா, தால்மியன், துஷ்யந்த், சிவராம் அடங்கிய மூன்று குழுக்கள் அடுத்த கட்டப் போட்டிக்கு தோ்வாகி உள்ளனா்.
இவா்களுக்குக்கான அடுத்தகட்ட போட்டி மாநில அளவில் சென்னை மேடவாக்கத்தில் உள்ள தனியாா் பள்ளியில் வரும் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது. மாநில அளவில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளை விவேகானந்தா கல்வி அறக்கட்டளை தலைவா் மருத்துவா் க. நெடுஞ்செழியன், அறக்கட்டளை செயலா் சுப்பிரமணியம், பொருளாளா் பொறியாளா் வேலுசாமி, விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளா் ராமசாமி, கல்விசாா் இயக்குநா் பழனிசாமி, அறக்கட்டளை இயக்குநா்கள் துரைசாமி வாசுதேவன் மற்றும் பள்ளி முதல்வா்கள், தலைமை ஆசிரியா், இருபால் ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் மற்றும் பெற்றோா் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனா்.