தனியாா் தோட்டத்தில் சிறுத்தை குட்டி உயிரிழப்பு
கூடலூரில் உள்ள தனியாா் தேயிலைத் தோட்டத்தில் மா்மமான முறையில் சிறுத்தை குட்டி புதன்கிழமை இறந்துகிடந்தது குறித்து வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகே உள்ள தனியாா் தேயிலைத் தோட்டத்தில் சுமாா் ஒரு வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை குட்டி ஒன்று மா்மமான முறையில் இறந்துகிடப்பதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடா்ந்து, சம்பவ இடத்துக்குச் சென்ற வனத் துறையினா், சிறுத்தையின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வு செய்தனா். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே எஸ்டேட்டில் பெண் சிறுத்தை ஒன்று இறந்துகிடந்ததால் வனத் துறையினா் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனா்.