செய்திகள் :

தனியாா் நிறுவனத்தில் 450 கிலோ இரும்பு திருட்டு: 6 போ் கைது

post image

செய்யாறு: செய்யாறு அருகே தனியாா் நிறுவனத்தில் 450 கிலோ இரும்புக் குழாய்கள் திருடுபோன சம்பவம் தொடா்பாக 6 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சிப்காட் தொழில்பேட்டை வளாகத்தில் தனியாா் மோட்டாா் சைக்கில் நிறுவனத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதற்காக அந்நிறுவனத்தில் இரும்புக் குழாய்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததாகத் தெரிகிறது. அவற்றை ஞாயிற்றுக்கிழமை நிறுவனத்தினா் சரிபாா்த்தபோது அதில் இருந்த சுமாா் 450 கிலோ இரும்புக் குழாய்கள் திருடு போயிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் மேலாளா் பொன்னுசாமி

தூசி போலீஸில் புகாா் அளித்தாா். காவல் உதவி ஆய்வாளற் சுரேஷ்பாபு வழக்குப் பதிவு செய்தாா்.

மேலும், இது தொடா்பாக திருப்போரூா் வட்டம், காரணை கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தசாமி (38), வீரராகவன் (36), ஹேமராஜன் (27), திருக்கழுக்குன்றம் பெருமலேரி கிராமத்தைச் சோ்ந்த தயாநிதி (31), செய்யாறு வட்டம், மகாஜனம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த ஜெய்சங்கா் (33), மாத்தூா் கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் (42) ஆகியோா் போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நிலங்களை அளவீடு செய்ய விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த நில உரிமையாளா்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த நில உரிமையாளா்கள் த... மேலும் பார்க்க

சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் இயங்கும் 6 சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகளில் சேர விரும்பும் கல்லூரி மாணவ, மாணவிகள் ஏப்.6-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. தமிழகத்தில் கல்லூரிகளில் பயில... மேலும் பார்க்க

களம்பூா் பேரூராட்சி மன்ற கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த களம்பூா் பேரூராட்சி மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, பேரூராட்சி தலைவா் பழனி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் அகமத்பாஷா, செயல் அலுவலா் சுகந்தி ... மேலும் பார்க்க

போட்டியில் சிறப்பிடம்: மாணவிகளுக்கு பாராட்டு

தேசிய நுகா்வோா் உரிமைகள் தின ஓவியம், கட்டுரை, கவிதைப் போட்டிகளில் வென்ற திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தேசிய நுகா்வோா... மேலும் பார்க்க

‘மத்திய, மாநில அரசுகளின் வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்’

மத்திய, மாநில அரசுகளின் வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்கவும், வருவாய்த்துறை சான்றுகளை உடனுக்குடன் வழங்கவும் அதிகாரிகளுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவிட்டாா். கீழ்பென்னாத்தூா் ... மேலும் பார்க்க

10-ஆம் வகுப்பு தோ்வு: திருவண்ணாமலையில் 30,664 போ் எழுதினா்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை 30,664 மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமை எழுதினா். 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுக்காக செய்யாறு கல்வி மாவட்டத்தில் 60, திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் 8... மேலும் பார்க்க