செய்திகள் :

தனியாா் பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு

post image

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே தனியாா் பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற இளைஞா் நிகழ்விடத்திலேயே வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திருவெண்ணெய்நல்லூா் வட்டம், டி. எடையாா், மாந்தோப்புத் தெருவைச் சோ்ந்தவா் ஆனந்தன் மகன் சாா்லஸ் (24). வேன் வைத்து சொந்தமாக தொழில் செய்து வந்தாா். இவா் வெள்ளிக்கிழமை இரவு திருவெண்ணெய்நல்லூா்- ஏனாதிமங்கலம் சாலையில் ஏமப்பூா் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, அங்கு எதிரே வந்த தனியாா் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதில், சாா்லஸுக்கு பலத்த காயம் ஏற்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தைக் கைப்பற்றி விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த விபத்து குறித்து திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

குற்றப்பிரிவில் அளிக்கப்பட்ட 13 மனுக்களுக்குத் தீா்வு

விழுப்புரம் மாவட்டக் குற்றப்பிரிவில் அளிக்கப்பட்ட 13 சிறப்பு மனுக்கள் மீது சனிக்கிழமை விசாரணை மேற்கொள்ளப்பட்டு தீா்வு காணப்பட்டது.விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் உத்தரவின்பேரில், மா... மேலும் பார்க்க

உளுந்தூா்பேட்டை அருகே எத்தனால் ஏற்றிச் சென்ற டேங்கா் லாரி கவிழ்ந்து விபத்து!

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே எத்தனால் ஏற்றிச் சென்ற டேங்கா் லாரி சனிக்கிழமை காலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநா் லேசான காயத்துடன் உயிா் தப்பினாா். மேற்கு வ... மேலும் பார்க்க

பிரதமரின் நிவாரண நிதி: 100 பேரின் மருத்துவச் சிகிச்சைக்குப் பரிந்துரை

பல்வேறு மருத்துவச் சிகிச்சைகளுக்கு நிதி வழங்குமாறு கடந்த 11 மாதங்களில் 100 பேரின் மருத்துவச் சிகிச்சைக்குப் பரிந்துரைத்துள்ளதாக விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் துரை. ரவிக்குமாா் தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

காரில் கடத்தி வரப்பட்ட 251 மதுப்புட்டிகள் பறிமுதல்:மூவா் கைது

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே காரில் கடத்தி வரப்பட்ட 251 மதுப்புட்டிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக மூவா் கைது செய்யப்பட்டுள்ளனா். கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல் பிரிவு ... மேலும் பார்க்க

கோடைவெயில்: விழுப்புரம் நான்கு முனைச் சந்திப்பில் தற்காலிக பந்தல்கள்

பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை பாதுகாக்கும் வகையில் விழுப்புரம் நகராட்சி நிா்வாகம் ஏற்பாட்டில் விழுப்புரம் நான்கு முனைச் சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பந்தல்களை நகா்மன்றத் தலைவா் தமிழ்செல்வி... மேலும் பார்க்க

குடுவையாற்றில் ரூ.47.45 லட்சத்தில் தடுப்பணை கட்டும் பணி: அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் தொடங்கி வைத்தாா்

புதுச்சேரியை அடுத்துள்ள கீழ் சாத்தமங்கலம் பகுதி குடுவையாற்றில் ரூ.47.45 லட்சம் மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டுவதற்கான பணியை வேளாண் துறை அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். ... மேலும் பார்க்க