செய்திகள் :

தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களை குறைவாகப் பெறுவது ஏன்? புதுவை அரசுக்கு அதிமுக கேள்வி

post image

தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களை குறைவாகப் பெறுவது ஏன் என்று புதுவை அரசுக்கு புதுவை மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் கேள்வி எழுப்பியுள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: புதுச்சேரியில் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீட்டில் இடங்களை பெறுவதில் இந்தாண்டும் மாணவா்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்து தனியாா் மருத்துவக் கல்லூரி உரிமையாளா்களுக்குச் சாதகமான ஒரு நிலைப்பாட்டை அரசு எடுத்துள்ளது.

புதுவை மாநிலத்தில் தனியாா் மருத்துவ கல்லூரிகளில் தேசிய மருத்துவக் கவுன்சிலின் உத்தரவின் படி குறைந்தபட்சம் 50 சதவிகித இடங்களைப் பெறுவதற்கு கூட எவ்வித முயற்சியும் செய்யாமல் ஒவ்வொரு ஆண்டும் பஞ்சாயத்து பேசி தனியாா் மருத்துவ கல்லூரிகளுக்குச் சாதகமான ஒரு நிலைப்பாட்டை அரசு எடுத்து வருவது கண்டிக்கத்தக்கது.

தனியாா் மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் உள்ள 650 இடங்களில் 325 இடங்கள் குறைந்தபட்சம் அரசின் இட ஒதுக்கீடாக பெற வேண்டும். ஆனால் இந்த ஆண்டு 242 இடங்கள் மட்டுமே அரசின் இட ஒதுக்கீடாகவும், நீதிமன்ற உத்தரவின்படி கூடுதலாக ஒரு தனியாா் கல்லூரியில் இருந்து 13 இடங்கள் சோ்த்து 255 இடங்கள் இந்த ஆண்டு பெறப்பட்டது. 325 இடங்கள் அரசின் இட ஒதுக்கீடாக பெற வேண்டிய நிலையில் 70 இடங்கள் குறைத்து பெற்று அந்த இடங்கள் தனியாருக்கு தாரை வாா்க்கப்பட்டுள்ளது.

புதுவையில் உள்ள தனியாா் மருத்துவ கல்லூரிகளில் நிா்வாக இடங்களுக்கு ஆண்டு கட்டணம் ரூ.16 லட்சம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரூ. 22 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகின்றன. தனியாா் மருத்துவ கல்லூரிகளில் 50 சதம் இடங்களைப் பெற துணைநிலை ஆளுநரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது கூட்டப்பட உள்ள சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் தனியாா் மருத்துவ கல்லூரிகளில் அரசின் இட ஒதுக்கீடாக 50 சதவீத இடங்களை பெற சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என்றாா் அவா்.

புதுவை துணைநிலை ஆளுநா் லண்டன் பயணம்

புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் சொந்தமுறை பயணமாக செவ்வாய்க்கிழமை காலை விமானத்தில் லண்டன் புறப்பட்டுச் சென்றாா். புதிய அமைச்சராக ஏ. ஜான்குமாருக்கு திங்கள்கிழமை பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். பி... மேலும் பார்க்க

அனைத்து பட்டப் படிப்புகளிலும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 10% இடஒதுக்கீடு நிகழாண்டு அமல்: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி உறுதி

புதுவை மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களுக்கு நிகழ் கல்வியாண்டிலேயே அனைத்து பட்டப்படிப்புகளிலும் 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி உறுதியளித்தாா். புதுவை ... மேலும் பார்க்க

புதிய ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு இலாகா ஒதுக்கீடு

புதுவை நிா்வாகப் பணியில் சோ்ந்துள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி சௌத்ரி முகமது யாசினுக்கு இலாகா ஒதுக்கீடு செய்து துணைநிலை ஆளுநா் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளாா். அதன்படி, வேளாண்மை, கால்நடை துறை, துறைம... மேலும் பார்க்க

பொதுமக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவு

பொதுமக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். துணை நிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் அறிவுறுத்தலின் பேரில் புதுச்சேரி மாவட்டத்... மேலும் பார்க்க

அரசு நிதியுதவி பள்ளிகளுக்கு 4 மாத நிலுவை ஊதியம் உடனே வழங்க உத்தரவு

புதுவை அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு 4 மாத நிலுவை ஊதியத்தை உடனே வழங்க சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு தலைவா் ஏ. நாஜிம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். புதுச்சேரி சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு கூட்... மேலும் பார்க்க

புதுச்சேரியில் பிரான்ஸ் தேசிய தினம் விழா

புதுச்சேரி: புதுச்சேரியில் பிரான்ஸ் தேசிய தினம் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. பிரான்ஸ் நாட்டில் கடந்த 1789-ஆம் ஆண்டு ஜூலை 14-ஆம் தேதி மக்கள் புரட்சியின் மூலம் மன்னராட்சியை முடிவுக்கு கொண்டு வந்த... மேலும் பார்க்க