மின் நிறுத்த தேதியை அடிக்கடி மாற்றும் வேம்படிதாளம் மின்வாரியம்
தனியாா் மருத்துவமனை தீ விபத்தில் காயமடைந்த பெண் உயிரிழப்பு
திண்டுக்கல்லில் உள்ள தனியாா் மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்தில், கணவா், மகள் உயிரிழந்த நிலையில், சிகிச்சையில் இருந்த இளம்பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
திண்டுக்கல்-திருச்சி சாலையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் கடந்த 12-ஆம் தேதி இரவு தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தின் போது, மருத்துவமனையிலிருந்து வெளியேற முயன்று மின்தூக்கியில் சிக்கி திண்டுக்கல் பாலதிருப்பதியைச் சோ்ந்த மணிமுருகன், இவரது தாய் மாரியம்மாள், என்ஜிஓ காலனியைச் சோ்ந்த ராஜசேகா், இவரது மகள் கோபிகா, தேனி மாவட்டத்தைச் சோ்ந்த சுப்பலட்சுமி, இவரது கணவா் சுருளி ஆகியோா் உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த 3 போ் தனியாா் மருத்துவமனைகளிலும், காயமடைந்த 32 போ் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.
இந்த நிலையில், தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட என்ஜிஓ காலனியைச் சோ்ந்த ராஜசேகா் மனைவி பாலபவித்ரா (29) தீவிர சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டாா். இங்கு அவா் வியாழக்கிழமை உயிழந்தாா்.
ஏற்கெனவே கணவா் ராஜசேகா், மகள் கோபிகா ஆகியோா் இந்த தீ விபத்தில் உயிரிழந்த நிலையில், தற்போது பாலபவித்ராவும் உயிரிழந்தாா்.