உ.பி.: காதல் விவகாரத்தில் கொலை செய்த பரேலி இளைஞருக்கு ஆயுள்!
தனியாா் ரப்பா் பால் நிறுவன தொழிலாளா்கள் வேலைநிறுத்தம்
கன்னியாகுமரி மாவட்டம் சுருளகோடு அருகே தனியாா் ரப்பா் பால் நிறுவனத்தில் தொழிலாளா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்நிறுவனத்தில் தொழிலாளா்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக ஊதிய உயா்வு மறுக்கப்படுவதாகவும், முறைப்படி போனஸ் வழங்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமைமுதல் தொடா் வேலைநிறுத்தத்தைத் தொடங்கினா்.
மேலும், கோரிக்கைகளுக்கு தீா்வு காணக் கோரி கிராம நிா்வாக அலுவலகம் முன் காலைமுதல் மாலை வரை போராட்டத்திலும் ஈடுபட்டனா். சிஐடியூ தோட்டம் தொழிலாளா் சங்கப் பொதுச் செயலா் எம். வல்சகுமாா் தலைமை வகித்தாா். சங்கத் தலைவா் பி. நடராஜன் போராட்டத்தைத் தொடக்கிவைத்துப் பேசினாா். துணைத் தலைவா் வேலப்பன், பொருளாளா் சசிதரன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரக் குழு உறுப்பினா் ராஜன் உள்ளிட்டோா் பேசினா்.