செய்திகள் :

தனுஷின் குபேரா படத்தின் முதல் பாடல் புரோமோ!

post image

நடிகர் தனுஷின் குபேரா திரைப்படத்தின் முதல் பாடல் புரோமோ விடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் மற்றும் நடிகர் நாகார்ஜுனா ஆகியோரின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘குபேரா’. இந்தப் படத்தின் முதல் பாடலின் புரோமோ விடியோ இன்று (ஏப்.15) படக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகும் இந்தத் திரைப்படமானது வரும் ஜூன் மாதம் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

பாலிவுட் நடிகர் ஜிம் சராப் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘குபேரா’ திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

முன்னதாக, வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் முதல் கிளிம்ஸ் விடியோவில் துனுஷ் மற்றும் நாகார்ஜுனா ஆகிய இருவரும் வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளித்தது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில், தமிழில் விவேகா மற்றும் தெலுங்கில் பாஸ்கரபாரதியின் வரிகளில் உருவான பாடல்களை நடிகர் தனுஷ் பாடியுள்ளார்.

மேலும், இந்த முதல் பாடல் தமிழில் ’போய் வா நண்பா’ என்ற தலைப்பிலும், தெலுங்கில் ‘போய் ரா மாமா’ , மலையாளத்தில் ‘போயிவா நண்பா’, கன்னடத்தில் ‘ஹோகிபா கெலேயா’ மற்றும் ஹிந்தியில் ‘ஜாகே ஆனா யாரா’ ஆகிய தலைப்புகளில் வரும் ஏப்.20 ஆம் தேதி வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது.

மாணவா், ஆசிரியைக்கு அரிவாள் வெட்டு சம்பவம்: மாணவனுக்கு 14 நாள் காவல்

பாளையங்கோட்டையில் பள்ளி வகுப்பறையில் இரு மாணவா்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவருக்கும், அதைத் தடுக்க வந்த ஆசிரியை அரிவாளால் வெட்டிய பள்ளி மாணவனுக்கு 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க இளைஞர் நீதிக்... மேலும் பார்க்க

தொடர்ந்து 14-வது ஆண்டாகக் குறையும் ஜப்பானின் மக்கள் தொகை!

ஜப்பான் நாட்டின் மக்கள் தொகையானது தொடர்ந்து 14வது ஆண்டாகக் குறைந்துள்ளது. ஜப்பானின் மக்கள் தொகையானது கடந்த 2024-ம் ஆண்டின் அக்டோபர் மாத கணக்குப்படி 12 கோடியாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இது 2023-ம் ஆண்டில... மேலும் பார்க்க

மாலத்தீவில் இஸ்ரேலிய கடவுச்சீட்டுகளுக்குத் தடை!

மாலத்தீவு நாட்டில் இஸ்ரேலிய கடவுச்சீட்டுகளுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.சுற்றுலா நாடான மாலத்தீவில் இஸ்ரேல் நாட்டின் கடவுச்சீட்டுகளின் மூலம் அந்நாட்டினுள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாலத்த... மேலும் பார்க்க

தில்லி கல்லூரி வகுப்பறையில் சாணம் பூசப்பட்ட விவகாரம்: பழிவாங்கிய மாணவத் தலைவர்!

தில்லியிலுள்ள ஒரு கல்லூரியின் வகுப்பறையின் சுவரில் மாட்டுச் சாணம் பூசப்பட்ட நிலையில் அந்தக் கல்லூரியின் முதல்வரின் அறையிலும் மாட்டுச் சாணம் பூசப்பட்டுள்ளது.தில்லி அரசின் கீழ் செயல்பட்டு வரும் லக்‌ஷ்மி... மேலும் பார்க்க

காஸா மருத்துவமனை மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்! ஒருவர் பலி!

காஸா நகரத்திலுள்ள மருத்துவமனையின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், மருத்துவப் பணியாளர் ஒருவர் பலியாகியுள்ளார்.காஸா மீதான இஸ்ரேலின் போரில் தங்குமிடங்களை இழந்தும், படுகாயமடைந்தும் பாதிக்கப்பட... மேலும் பார்க்க

ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதை வென்ற ஷ்ரேயாஸ் ஐயர்!

ஐசிசியின் மார்ச் மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருதினை இந்திய அணியின் ஷ்ரேயாஸ் ஐயர் வென்றுள்ளார்.இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் ஐயர் கடந்த மாதத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொ... மேலும் பார்க்க