செய்திகள் :

தமிழகத்தில் ஆக.23 வரை மழை நீடிக்கும்!

post image

தமிழகத்தில் திங்கள்கிழமை (ஆக.18) முதல் ஆக.23 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் திங்கள்கிழமை (ஆக.18) முதல் ஆக.23-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும், ஓரிரு இடங்களில் 50 கி.மீ. வேகத்தில் தரைகாற்று வீசக்கூடும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் திங்கள்கிழமை (ஆக.18) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னகல்லாறில் 90 மி.மீ. மழை பதிவானது. வால்பாறை - 70 மி.மீ., சோலையாறு, சின்கோனா (கோவை), நடுவட்டம் (நீலகிரி) - 50 மி.மீ. மழை பதிவானது.

புயல் சின்னம் வலுவடையும்: வடக்கு ஆந்திரம் மற்றும் தெற்கு ஒடிஸா கடலோரப் பகுதிகளுக்கு அருகே வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாகியுள்ளது. இந்த புயல்சின்னம் மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து திங்கள்கிழமை (ஆக.18) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையும்.

தொடா்ந்து இது, மேலும் மேற்கு திசையில் நகா்ந்து செவ்வாய்க்கிழமை (ஆக.19) தெற்கு ஒடிஸா மற்றும் வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளைக் கடக்கக்கூடும். இதனால், தமிழகத்தில் பெருமளவு மழை பெய்ய வாய்ப்பில்லை.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: திங்கள், செவ்வாய் (ஆக.18, 19) ஆகிய இரு நாள்கள் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் வங்கக் கடலில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தங்கம் விலை நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஆக. 18), மாற்றமின்றி விற்பனையாகிறது.சென்ற வாரம் தொடக்கம் முதலே தங்கம் விலை படிப்படியாக குறைந்து வந்தது. கடந்த ஆக. 11-இல் சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.75,000-க்க... மேலும் பார்க்க

தேர்தல் அரசியல் போர் உத்தியில் வெல்வோம்: விஜய்

தேர்தல் அரசியல் போர் உத்தியில் வெல்வோம் என்று தவெக தலைவர் விஜய் தனது தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு ஆக. 21ஆம் தேதி நடைபெறும் என அ... மேலும் பார்க்க

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் புயல் சின்னம்!

வங்கக்கடலில் நிலவிய புயல் சின்னம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் ஒடிசா மற்றும்... மேலும் பார்க்க

விடியல் பயணம்: ஒவ்வொரு மகளிரும் ரூ. 50,000 வரை சேமிப்பு - முதல்வர் ஸ்டாலின்

விடியல் பயணத் திட்டத்தால் 51 மாதங்களில் ஒவ்வொரு மகளிரும் ரூ.50,000 வரை சேமித்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் வகையிலான மகளிர் விடி... மேலும் பார்க்க

தீபாவளி முன்பதிவு: சில நிமிடங்களிலேயே விற்றுத்தீர்ந்த ரயில் டிக்கெட்!

சென்னையிலிருந்து ரயில்களில் தீபாவளிக்காக வெளியூர் செல்வோருக்கான முன்பதிவு திங்கள்கிழமை (ஆக.18) காலை தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத்தீர்ந்தது.ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்காக சென்னையிலிருந்து வெளி... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 12 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புத... மேலும் பார்க்க