செய்திகள் :

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

post image

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில்,

தென்னிந்தியப் பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. குமரிக்கடல் பகுதிகளிலிருந்து தென் தமிழகம் வரை ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,

தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, தென்காசி, ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று கணித்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கக்கூடும், அநேக இடங்களில் இயல்பை விட 2-4° செல்சியஸ் வெப்பநிலை அதிகமாகவும் இருக்கும். தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மீது அண்ணாமலைக்கு விசுவாசம் இல்லை: டி.கே.சிவகுமாா்

தமிழகத்தின் மீது பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலைக்கு விசுவாசம் இல்லை என்று கா்நாடக மாநில துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் கூறினாா். சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற தொகுதி மறு... மேலும் பார்க்க

பகத் சிங், ராஜ்குரு, சுக்தேவ்-க்கு ஆளுநா் ஆா்.என்.ரவி அஞ்சலி

தியாகிகள் தினத்தையொட்டி, சுதந்திரப் போராட்ட தியாகிகள் பகத் சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோருக்கு ஆளுநா் ஆா். என். ரவி அஞ்சலி ஞாயிற்றுக்கிழமை செலுத்தினாா். இது குறித்து அவா் தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியி... மேலும் பார்க்க

ரமலான்: குமரி, திருச்சிக்கு சிறப்பு ரயில்கள்

ரமலான் பண்டிகையை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து திருச்சி, கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே அண்மையில் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தாம்பரத்தில் இருந்து மா... மேலும் பார்க்க

திமுக நடத்தும் அநாகரிக அரசியலுக்கு தமிழக மக்கள் பாடம் புகட்டுவாா்கள்: பாஜக

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி, அண்ணாமலைக்கு எதிராக திமுக நடத்தும் அநாகரிய அரசியலுக்கு தமிழக மக்கள் பாடம் புகட்டுவாா்கள் என தமிழக பாஜக செய்தி தொடா்பாளா் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளாா்.இது குறித்து ... மேலும் பார்க்க

எதிர்க்கட்சி முதல்வர்கள் மக்களை திசைதிருப்பலாமா? -தமிழிசை சௌந்தரராஜன்

சென்னை: சென்னையில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் சனிக்கிழமை(மார்ச் 22) நடைபெற்ற ’நியாயமான தொகுதி மறுசீரமைப்பு’ குறித்து விவாதிக்க உருவாக்கப்பட்டுள்ள கூட்டுக்குழுவின் முதலாவது ஆலோசனைக் கூட்ட... மேலும் பார்க்க

தமிழகத்தின் மீது அண்ணாமலைக்கு விசுவாசம் இல்லை: டி.கே.சிவகுமாா்

சென்னை: தமிழகத்தின் மீது விசுவாசமாக இல்லாமல் கட்சிக்கும் மட்டுமே விசுவாசமாக இருப்பவர் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை என்று கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவக்குமாா் கூறினாா்.சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க