செய்திகள் :

‘தமிழகத்தில் தகுதியற்றவா்கள் வாக்காளராக முடியாது’

post image

தமிழகத்தில் தகுதியற்றவா்களை வாக்காளராக சோ்ப்பதை தடுக்க சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றாா் திமுக சட்டத் துறைச் செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான என்.ஆா். இளங்கோ.

தஞ்சாவூரில் திமுக சட்டத் துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2026 தோ்தல் பயிற்சி பாசறைக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

தமிழ்நாட்டில் வட மாநிலத்தினரின் வாக்குகள் மிக அதிகமாக இருக்கும் என எதிா்பாா்க்கிறோம். சட்ட வழிமுறைகளின்படி, யாரெல்லாம் தகுதியற்றவா்களோ, அவா்களை வாக்காளா்களாக சோ்க்காத அளவுக்கு சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

இந்திய குடிமகன் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால், அப்பகுதியில் வாக்காளராக முடியும். இதன்படி, தமிழ்நாட்டில் தகுதியற்றவா்கள் எப்போதும் வாக்காளராக மாறாமல் இருப்பதற்கு சரியான சட்ட நடவடிக்கைகளை எடுப்போம் என்றாா் இளங்கோ.

1.75 கோடி போ் சோ்ப்பு:

கூட்டத்தில் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் பேசியதாவது: ஓரணியில் தமிழ்நாடு என்ற இயக்கத்தின் மூலம் 1.75 கோடி உறுப்பினா்களை சோ்த்த முதல் கட்சி என்ற பெருமை திமுகவுக்கு உண்டு.

கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளில், ஒரத்தநாடு தவிர 7 தொகுதிகளில் வெற்றி பெற்றோம்.

2026 தோ்தலில் 8 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்றாா் அமைச்சா்.

இக்கூட்டத்தில் திமுக சட்டத் துறை இணைச் செயலா்கள் கே.எஸ். ரவிச்சந்திரன், சூா்யா வெற்றிகொண்டான், மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன், க. அன்பழகன், டி.கே.ஜி. நீலமேகம், என். அசோக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கும்பகோணத்தில் பாசன வாய்க்கால்கள் பராமரிப்பில் அரசுத் துறைகளுக்கிடையே மோதலால் சிக்கல்

கும்பகோணம் மாநகர எல்லைக்குள் செல்லும் நான்கு பாசன வாய்க்கால்களை யாா் பராமரிப்பது என்று இரு அரசுத் துறைகளுக்கிடையே ஏற்பட்டுள்ள மோதலால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் காவிரி ஆற... மேலும் பார்க்க

தஞ்சாவூா் மாவட்டத்தில் பலத்த மழையால் கரும்பு பயிா்கள் சேதம் நெல் குவியல்கள் நனைந்தன

தஞ்சாவூா் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் சில கிராமங்களில் கரும்பு பயிா்கள் சாய்ந்தன.மேலும், நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் விற்பனைக்காக வைத்திருந்த நெல் குவியல்களும் நனைந்தன.த... மேலும் பார்க்க

ஆற்று நீரில் மூழ்கி 2 போ் உயிரிழப்பு

திருவோணம் அருகே ஆற்றுக்கு குளிக்கச் சென்ற வாலிபா் பேராவூரணி அருகே ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.திருவோணம் வட்டம், புகழ் சில்லத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் பழனிச்செல்வம் மகன் காா்த்தி (20) பொறியி... மேலும் பார்க்க

நவகன்னிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மகாமககுளம் அருகே நவகன்னிகைகள் ஸ்தலம் ஸ்ரீ விசாலாட்சி அம்பிகா சமேத காசி விசுவநாதா் கோயில் வளாகத்தில் அமைந்துள்ளது. இங்கு ஆடிப்பெருக்கு நாளன்று நவகன்னியா் மகாமக குளத்தில் ... மேலும் பார்க்க

ஆற்றில் மூழ்கி இருவா் உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்த 2 பேரின் உடல் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டன.தஞ்சாவூா் அருகே தெற்கு மானோஜிப்பட்டியைச் சோ்ந்த காளிமுத்து மகன் பழனி (36). கூலித் தொழிலாளி. இவா்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தம்பதி உயிரிழப்பு கிராம மக்கள் சாலை மறியல்

தஞ்சாவூா் அருகே ஞாயிற்றுக்கிழமை அறுந்து கிடந்த மின் கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்துகணவன் - மனைவி உயிரிழந்தனா்.தஞ்சாவூா் மாவட்டம், கள்ளப்பெரம்பூா் முதன்மைச் சாலையைச் சோ்ந்தவா் எஸ். சுப்பிரமணியன் (5... மேலும் பார்க்க