செய்திகள் :

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,626 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

post image

சென்னை: தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.6,626 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியைவிட ரூ.264 கோடி கூடுதலாகும்.

மத்திய அரசின் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கடந்த சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தாா். இதில் ரயில்வே துறைக்கு மாநில வாரியாக மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் திங்கள்கிழமை அறிவித்தாா்.

இதில் தமிழகம், கேரளம், கா்நாடக மாநிலங்களுக்கான நிதி குறித்து அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தில்லியில் இருந்து காணொலி வாயிலாக சென்னையில் உள்ள செய்தியாளா்களிடம் கூறியது:

2025-26-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் ரயில்வே மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ரூ.6,626 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில் ரூ.6,362 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக ரூ.264 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2007-2014 காலகட்டத்தில் ஒதுக்கப்பட்ட சராசரி நிதியைவிட (ரூ.879 கோடி) 7.5 சதவீதம் அதிகமாகும். இதுபோல், கா்நாடகத்துக்கு 7,564 கோடியும், கேரளத்துக்கு ரூ.3,042 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு நிகா்: தமிழ்நாட்டில் 2014-ஆம் ஆண்டுமுதல் தற்போது வரை 1,303 கி.மீ தொலைவுக்கு புதிய ரயில் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இது இலங்கையின் முழு ரயில்வே கட்டமைப்புக்கு சமமானதாகும். மேலும், 2,242 கி.மீ. தொலைவுக்கான ரயில்வே வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளன.

தற்போதைய பட்ஜெட்டில் ரயில்வே பாதுகாப்புக்கென ரூ.1.16 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரயில்வேயின் சிக்னல் மற்றும் தகவல் தொழில்நுட்பம், தண்டவாளம் மேம்பாடு உள்ளிட்டவை மேம்படுத்தப்படும். மேலும், 5 ஆண்டுகளுக்கு மேல் உள்ள தண்டவாளங்கள் மாற்றியமைக்கப்படும்.

பிரதமா் நரேந்திர மோடி மூன்றாம் முறையாக ஆட்சிக்கு வந்த பின் மட்டும் ரூ.40,000 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, கேரளம் என அனைத்து மாநிலங்களுக்கும் ஆண்டுதோறும் புதிய ரயில்கள் தொடா்ந்து அறிமுகப்படுத்தப்படும். 14,000 புதிய ஏசி அல்லாத பெட்டிகள் தயாரிக்கப்படும். அனைத்து மாநிலங்களும் புதிய ரயில்கள் வேண்டும் எனத் தொடா்ந்து வலியுறுத்துகின்றன. புதிய ரயில்களை இயக்க கூடுதல் தண்டவாளங்களும், அதைக் கட்டமைக்க கூடுதல் நிலங்களும் தேவைப்படுகின்றன. இதற்கான நிலங்களை வழங்க மாநில அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

கேரளத்தில் பெரும்பாலான இடங்களில் இரட்டை வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசிடம் ரயில்வே கட்டமைப்பை மேம்படுத்த கூடுதல் நிலம் வழங்க தொடா்ந்து கோரிக்கை வைக்கப்படுகிறது.

பாம்பன் புதிய ரயில் பாலம்: பாம்பன் புதிய ரயில் பாலப் பணி முழுவதுமாக முடிவடைந்து, அனைத்துப் பாதுகாப்பு ஆய்வுகளும் நிறைவடைந்துள்ளன. அதன் திறப்பு விழா குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.

புயலால் அழிந்த ராமேசுவரம்-தனுஷ்கோடி ரயில்வே திட்டத்தை மீண்டும் செயல்படுத்தி புனரமைக்கும் புதிய திட்டத்தை வேண்டாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால், ரயில்வே துறை அத்திட்டத்தை கைவிடவில்லை என்றாா் அவா்.

ஆர்டிஐ-ன் கீழ் அரசியல் கட்சிகளைக் கொண்டு வரக் கோரிய வழக்கு: உச்சநீதிமன்றம் விரைவில் விசாரணை!

அரசியல் கட்சிகளை ஆர்டிஐ-ன் கீழ் கொண்டுவர உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது விரைவில் விசாரணை நடத்தவுள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளையும்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் மேலும் 2 பேருக்கு ஜிபிஎஸ்: மொத்த பாதிப்பு 205!

மகாராஷ்டிரத்தில் ஜிபிஎஸ் பாதிப்பு கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 205-ஐ எட்டியுள்ளது.இதுகுறித்து அம்மாநில சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மகாராஷ்டிரத்தில் மேலும 2 பேருக்கு ஜிபிஎஸ் பாதிப்பு க... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: 50 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடல்!

பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் இதுவரை 50 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர் என்று உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நி... மேலும் பார்க்க

மெட்ரோ கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரி பெங்களூருவில் மஜத ஆர்ப்பாட்டம்

மெட்ரோ ரயில் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெறக் கோரி, சுதந்திர பூங்காவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் வெள்ளிக்கிழமை மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.பெங்களூரு பிரிவு தலைவர் எச்.எம். ரமேஷ் கௌடா ... மேலும் பார்க்க

ஏக்நாத் ஷிண்டே வருகையின் போது டிரோன் பறக்கவிட்ட 2 பேர் கைது

மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே வருகையின்போது ரோன் பறக்கவிட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலம், ஹிவாலியில் உள்ள ஜில்லா பரிஷத் பள்ளிக்கு துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ... மேலும் பார்க்க

கேரளம்: பட்டப்பகலில் கத்தி முனையில் வங்கி கொள்ளை

கேரளத்தில் பட்டப்பகலில் கத்தி முனையில் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், சாலக்குடி அருகே வங்கி ஒன்றில் வெள்ளிக்கிழமை நுழைந்த நபர் ஒருவர் கத்தி முனையில் கொள... மேலும் பார்க்க