செய்திகள் :

தமிழக வீரரிடம் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்: ரஷித் கான்

post image

தமிழக வீரர் சாய் கிஷோரிடமிருந்து கற்றுக்கொள்ள விரும்புவதாக பிரபல ஆப்கன் வீரர் ரஷித் கான் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2025 சீசனில் புள்ளிப் பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதலிடத்தில் இருக்கிறது. பேட்டிங் மட்டுமல்லாமல் பந்துவீச்சிலும் அசத்திவருகிறது.

கொல்கத்தாவில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் 39 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி பெற்றது.

இந்த அணியில் தமிழக வீரர் சாய் கிஷோர் சிறப்பாக பந்து வீசி வருகிறார்.

ஃபார்மில் இல்லாமல் இருந்த ரஷித் கான் தற்போது சிறப்பாக பந்துவீச தொடங்கியுள்ளார்.

இது குறித்து ரஷித் கான் கூறியதாவது:

போட்டிக்கு முன்பாக நானும் சாய் கிஷோரும் அதிகமாக பேசுவோம். நான் அவரிடம் பிட்ச்சுகளை நம்பி இருக்க வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக சரியான இடங்களில் பந்துவீச வேண்டுமெனக் கூறினேன்.

சாய் கிஷோர் பந்துவீசும் விதமும் அவரது வேறுபட்ட வகையிலான பந்துகளும் எனக்குப் பிடித்துள்ளன. நான் அவரிடம் இருந்து கற்றுக்கொள்கிறேன்.

நானும் சாய் கிஷோர் மாதிரி பந்துவீச நினைக்கிறேன். நான் என்னுடைய அனுபவத்தை அவரிடம் பகிர்கிறேன். அத்துடன் இந்தியாவில் எப்படி பந்துவீச வேண்டும் என்பதையும் நான் அவரிடம் இருந்து கற்கிறேன் எனக் கூறியுள்ளார்.

முகேஷ் குமார் வேகத்தில் லக்னௌ திணறல்: தில்லிக்கு 160 ரன்கள் இலக்கு!

தில்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னௌ அணி 160 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடர் லீக் சுற்றின் 40-வது போட்டியில் தில்லி மற்றும் லக்னௌ அணிகள் விளையாடுகின்றன. உத்தரப் பிரதேச... மேலும் பார்க்க

பிட்ச் மேற்பார்வையாளரை விமர்சித்ததால் தடை செய்யப்பட்ட வர்ணனையாளர்கள்!

ஈடன் கார்டன்ஸ் பிட்ச் மேற்பார்வையாளரை விமர்சித்ததால் வர்ணனையாளர்கள் ஹர்ஷா போக்லே, சைமன் டௌலை சிஏபி தடை விதித்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈடன் கார்டன்ஸ் பிட்ச் கொல்கத்தா அணிக்கு சாத... மேலும் பார்க்க

டாஸ் வென்று தில்லி பந்துவீச்சு: தாக்குப் பிடிக்குமா லக்னௌ?

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. மேலும் பார்க்க

சாய் சுதர்சனுக்கு முன்னாள் சிஎஸ்கே வீரர் பாராட்டு!

குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு பாராட்டியுள்ளார்.ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நேற்று நடைப... மேலும் பார்க்க

கேகேஆர் பேட்டர்களிடம் நம்பிக்கை குறைவாக உள்ளது: டுவைன் பிராவோ

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பேட்டர்களிடம் நம்பிக்கை குறைவாக உள்ளதாக அந்த அணியின் ஆலோசகர் டுவைன் பிராவோ தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவில் நேற்று (ஏப்ரல் 21) நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா... மேலும் பார்க்க

சிஎஸ்கே அணி வீரரின் தந்தை காலமானார்!

சென்னை சூப்பர் கிங்ஸ்(சிஎஸ்கே) அணி வீரர் டெவான் கான்வேயின் தந்தை உயிரிழந்தார். இந்த தகவலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. நியூஸிலாந்து நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் டெவான் கான... மேலும் பார்க்க