செய்திகள் :

`தமிழைவிட சம்ஸ்கிருதம்தான் பழைமையானது; தோல்வி பயத்தில் திமுக...' - மக்களவையில் பாஜக எம்.பி பேச்சு

post image

தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை எதிர்ப்பதன் மூலம் தி.மு.க நாட்டைப் பிளவுபடுத்த முயற்சிப்பதாக ஜார்கண்ட் பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டியிருக்கிறார். இன்று மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் இந்தப் பிரச்னை குறித்துப் பேசிய அவர், ``அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல்களில் தோல்வியடைவோம் என்ற அச்சத்தில் தி.மு.க மக்களின் உணர்ச்சிகளை தூண்டுகிறது. தமிழ் ஒரு பழைமையான மொழி, ஆனால் சம்ஸ்கிருதம் தமிழைவிட பழைமையானது.

நிஷிகாந்த் துபே

தமிழ் பேசும், தெலுங்கு பேசும், கன்னடம் பேசும் பகுதி மட்டுமல்ல, நாடு முழுவதும் எந்தக் கோயிலுக்கு வேண்டுமானாலும் செல்லுங்கள் எல்லா இடங்களிலும் சம்ஸ்கிருதத்தில்தான் பூஜை செய்யப்படுகிறது. தி.மு.க மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி நாட்டைப் பிரிக்க விரும்புகிறது. தேசியக் கல்விக் கொள்கையை எதிர்க்கும் திமுக தமிழ், தெலுங்கு, மைதிலி, சந்தாலி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளுக்கும் எதிராகவே இருக்கிறது. நாட்டில் நல்லிணக்கத்தைக் குலைக்க முயற்சிக்கிறது. ஆங்கிலத்தை திணித்து தேர்தல்களில் வெற்றி பெற விரும்புகிறது" என்றார். பாஜக எம்.பி-யின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் விவாதத்தை தூண்டியிருக்கிறது.

``ஸ்டார்லிங்க் நம்பகத்தன்மையற்றது என நிரூபிக்கப்பட்டால்...'' - போலந்து அமைச்சர் ராடோஸ்லாவ் பதில்!

ரஷ்யா உக்ரைன் போரின் காரணமாக உக்ரைனில் தகவல் தொடர்பு முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. இதனால் உக்ரைன் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் என்ற தொலைத்தொடர்பை தான் பயன்படுத்தி வருகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவர... மேலும் பார்க்க

எஸ்.பி.வேலுமணி வீட்டு விசேஷம் : சந்தித்துக்கொள்ளாத செங்கோட்டையன் - எடப்பாடி!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மகன் விஜய் விகாஷ் – தீக்‌ஷனா தம்பதிக்கு கடந்த மார்ச் 3-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க நிர்வாகிகள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலர் க... மேலும் பார்க்க

`236 தொழிற்சாலைகள் அமைத்து இளைஞர்களுக்கு வேலை வழங்கியிருக்கிறோம்’ - புதுச்சேரி ஆளுநரின் பட்ஜெட் உரை

புதுச்சேரி 15-வது சட்டசபையின் 6-வது பட்ஜெட் கூட்டத்தொடர் கவர்னர் கைலாஷ்நாதன் உரையுடன் இன்று துவங்கியது. திருக்குறளுடன் துவங்கிய அவர், ஆளுநர் உரை முழுவதையும் தமிழில் வாசித்தார். அப்போது, ``அரசின் பல்வே... மேலும் பார்க்க

`நான் கனடிய மக்களை ஏமாற்றவில்லை; ஒவ்வொரு நாளும்..!'- பிரிவு உபசார விழாவில் கண்கலங்கிய ஜஸ்டின் ட்ரூடோ

இந்த ஆண்டு ஜனவரியில் அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாக, கனடா பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக ஜஸ்டின் ட்ருடோ (Justin Trudeau) அறிவித்தார். அதைத் தொடர்ந்து புதிய பிரதம... மேலும் பார்க்க

அதிமுக : சட்டசபை கூட்டணி கணக்கை சொல்லும் மாநிலங்களவை `சீட்’ கணக்கு - தேமுதிக இனி?!

கடந்த 2019-ம் ஆண்டு ஜூலையில் தமிழ்நாட்டிலிருந்து 6 மாநிலங்களவை எம்.பி-க்கள் தேர்வாகினர். இதில் தி.மு.க-விலிருந்து வழக்கறிஞர் வில்சன், தொ.மு.ச பேரவைத் தலைவர் சண்முகம், எம்.எம் அப்துல்லா, தி.மு.க கூட்டண... மேலும் பார்க்க