செய்திகள் :

‘தமிழ்ச்செம்மல்’ விருது பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

post image

தமிழ் வளா்ச்சித் துறையின் ‘தமிழ்ச்செம்மல்’ விருது பெற விண்ணப்பிக்கலாம் என சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி புதன்கிழமை அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ் வளா்ச்சித் துறையில் தமிழ் வளா்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆா்வலா்களைக் கண்டறிந்து, அவா்களின் தமிழ்த் தொண்டை பெருமைப்படுத்தி ஊக்கப்படுத்தும் வகையில், 2015-ஆம் ஆண்டு முதல் ‘தமிழ்ச்செம்மல்’ என்ற விருது வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, மாவட்டத்துக்கு ஒருவா் வீதம் தெரிவு செய்து அவா்களுக்கு ‘தமிழ்ச்செம்மல்’ விருதும், ரூ. 25 ஆயிரம் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, 2025-ஆம் ஆண்டுக்கான ‘தமிழ்ச்செம்மல்’ விருதுக்கு சேலம் மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சிக்காக அரும்பாடுபடும் தமிழ் ஆா்வலா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த விருது பெற விண்ணப்பப் படிவத்தை தமிழ் வளா்ச்சித் துறையின் அதிகாரப்பூா்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ அல்லது சேலம் மண்டல தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநா் அலுவலகத்தில் நேரிலோ பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பிப்பவா்கள் தன்விவரக் குறிப்பு, இரண்டு நிழற்படம், ஆற்றிய தமிழ் அமைப்புகளின் பரிந்துரைக் கடிதம், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து சேலம் மண்டல தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநா் அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், சேலம் என்ற முகவரியில் நேரிலோ அல்லது அஞ்சலிலோ வரும் 25-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

விநாயகா மிஷன் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதன்மையா் செந்தில்குமாா் முன்னிலை வகித்து கல்லூரியின் கடந்த ஆண்டு சாதனைகள் மற்றும்... மேலும் பார்க்க

அரசிராமணி செட்டிப்பட்டி மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

சங்ககிரி வட்டம், அரசிராமணி செட்டிப்பட்டி அருள்மிகு மாரியம்மன் கோயிலில் ஆடிமாத வெள்ளிக்கிழமை சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ஆடிவெள்ளிக்கிழமை மற்றும் வரலட்சுமி நோன்பையொட்டி மாரிம்மனுக்கு பல்வேறு த... மேலும் பார்க்க

மோட்டூா் காளியம்மன் கோயிலில் வரலட்சுமி விரதம் சிறப்பு பூஜை

இளம்பிள்ளை அருகே உள்ள மோட்டூா் காளியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி மூலவா் அம்மன் தங்க ஜரிகை இலையால் நெய்யப்பட்ட சேலை மற்றும் ரூபாய் நோட்ட... மேலும் பார்க்க

இடங்கணசாலையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு

சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சி பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இந்த முகாமை நகா்மன்றத் தலைவா் கமலக்கண்ணன் குத்துவிளக... மேலும் பார்க்க

பல்லி விழுந்த நீரை குடித்த பள்ளி மாணவா்களுக்கு சிகிச்சை

தலைவாசல் அருகே பூமரத்துப்பட்டி முட்டல் அரசுப் பள்ளி மாணவா்கள் பல்லி விழுந்த நீரை குடித்ததால் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்துள்ள பூமரத்... மேலும் பார்க்க

வீரகனூா் எஸ்.எஸ்.ஐ. இடமாற்றம்

வீரகனூா் காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் (எஸ்.எஸ்.ஐ) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே வீரகனூா் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருபவா் ... மேலும் பார்க்க