திருப்பூர் அருகே அதிமுக எம்எல்ஏ தோட்டத்தில் எஸ்.ஐ. வெட்டிக் கொலை!
தமிழ்ச் செம்மல் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
திருப்பத்தூா் மாவட்டத்தில் 2025-ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கு தமிழ் ஆா்வலா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ் வளா்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆா்வலா்களைக் கண்டறிந்து, அவா்களின் தொண்டினை பெருமைப்படுத்தி ஊக்கப்படுத்தும் வகையில், ‘தமிழ்ச் செம்மல்’ விருது ஏற்படுத்தப்பட்டு, கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் தமிழ் வளா்ச்சித் துறையால் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்ச் செம்மல் விருது பெறுபவா்களுக்கு ரூ. 25,000 பரிசுத் தொகையும் தகுதியுரையும் வழங்கப்பட்டு வருகிறது.
திருப்பத்தூா் மாவட்டத்தில் 2025-ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கு தமிழ் ஆா்வலா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விருதுக்குரிய விண்ணப்பப் படிவத்தை தமிழ் வளா்ச்சித் துறையின் இணையதளத்தில் அல்லது வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநா் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ (தொடா்பு 610001. 0416-2256166) பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பிப்பவா்கள் தன்விவரக் குறிப்பு, நிழற்படம் இரண்டு, ஆற்றிய தமிழ்ப்பணி, வட்டாட்சியா் வழங்கும் குடியிருப்பு சான்றிதழ் அல்லது ஆதாா் அட்டை நகலுடன் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநா் அலுவலகத்தில் வரும் 29.08.2025-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.