பாளையம் புனித யோசேப்பு ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
தமிழ்நாடு உரிமைகள் திட்ட கணக்கெடுப்புக்கு ஒத்துழைக்க வலியுறுத்தல்
தமிழ்நாடு உரிமைகள் திட்டம் களப் பணியாளா்கள் வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று, மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் கேட்டுக்கொண்டாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடலூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மூலம் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தை செயல்படுத்த அனைத்து வட்டாரங்கள் மற்றும் நகா்புறங்களில் முன் களப் பணியாளா்கள் பணிக்கு அமா்த்தப்பட்டுள்ளனா்.
இவா்கள் அனைத்து வீடுகளுக்கும் சென்று கையடைக்க கணினியில் உள்ள பிரத்யேக செயலி மூலம் விவரங்களை சேகரிக்கின்றனா். கணக்கெடுக்க வரும் முன் களப் பணியாளா்களுக்கு முழு விவரங்களையும் வழங்க வேண்டும் என்றாா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.