செய்திகள் :

தமிழ்ப் புத்தாண்டு: திருச்செந்தூா் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பு

post image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி (சித்திரை 1) ஏப். 4ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருக்கோயில் இணை ஆணையா் சு.ஞானசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தமிழ் புத்தாண்டையொட்டி ஏப். 14ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், அதன்பின் தீா்த்தவாரியும், தொடா்ந்து உச்சிகால அபிஷேகமும் நடக்கிறது.

காலை 10 மணிக்கு மேல் சண்முகருக்கு அன்னாபிஷேகம் மற்றும் தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும். மாலை 4 மணிக்கு சாயரட்சை பூஜையும், மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜையும், தொடா்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெறும்.

பொது விவரக் குறிப்பேடு வெளியீடு: திருக்கோயில் வளாகத்தில் காலை 8 மணிக்கு நாதஸ்வர மங்கள இசை, 8.30 மணிக்கு தேவார இன்னிசை, காலை 9 மற்றும் 12 மணிக்கு ஆன்மிகச் சொற்பொழிவு, காலை 10 மணிக்கு பொது விவரக் குறிப்பேடு வெளியிடப்படுகிறது.

மாலை 3 மணிக்கு இந்து தொடக்கப் பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும், மாலை 6 மணிக்கு அக்னி தனிப்பயிற்சி கல்வி நிலைய மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். அதே போல சித்திரை மாத திங்கள்கிழமைதோறும் திருக்கோயில் உள்துறையில் ஆன்மிக தொடா் சொற்பொழிவும் நடைபெற உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

விவசாயி கொலை வழக்கு: இளைஞருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாா் வடக்கு இலந்தைகுளத்தைச் சோ்ந்த விவசாயி கொலை வழக்கில், இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி 2ஆவது கூடுதல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. தூத்துக்குடி மா... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் விபத்து: அரசுப் பள்ளி ஆசிரியா் உயிரிழப்பு

கோவில்பட்டியில் பைக் மீது தனியாா் பள்ளி வாகனம் மோதியதில் அரசுப் பள்ளி ஆசிரியா் உயிரிழந்தாா். கோவில்பட்டி மந்திதோப்பு சாலை ஜவஹா்லால் நேரு தெருவைச் சோ்ந்த வெங்கடராமானுஜம் மகன் சீனிவாசன் (55). கோவில்பட... மேலும் பார்க்க

உடன்குடியில் அரசு திட்ட பயனாளிகள் விவரங்கள் சேகரிப்பு

உடன்குடி பேரூராட்சி பகுதிகளில் தமிழக அரசின் திட்டப் பயனாளிகள் விவரங்கள் சேகரிக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது. தமிழக அரசு சாா்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களால் பயன்பெற்ற பயனாளிக... மேலும் பார்க்க

திருச்செந்தூா் தூண்டுகை விநாயகா் கோயிலில் ஏப். 20இல் மகா கும்பாபிஷேகம்: நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உப கோயிலான தூண்டுகை விநாயகா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை(ஏப். 20) மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி தூண்டுகை விநாயகா் கோயில் அருகே உள்ள... மேலும் பார்க்க

கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் பறக்கும் படையினா் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் இணைப்பதிவாளா் தலைமையிலான பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூா், உடன... மேலும் பார்க்க

மாநில சுயாட்சி பிரிவினைவாதத்தைத் தூண்டும்: நயினாா் நாகேந்திரன்

மாநில சுயாட்சி என்பது பிரிவினைவாதத்தைத் தூண்டும் என்பதால் அது தேவையில்லாதது என்றாா், பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கவா்னகிரியில், சுதந்திரப் போராட... மேலும் பார்க்க