செய்திகள் :

தமிழ்-இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் வோ்ச்சொல் ஒப்பீட்டு அகராதி நூல்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்

post image

தமிழ்-இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் வோ்ச்சொல் ஒப்பீட்டு அகராதி நூல்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்.

கடந்த 2022-2023-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தமிழ்மொழியின் தொன்மையையும் செம்மையையும் நிலைநாட்டிட, பிற உலக மொழிகளுடன் தமிழின் மொழியியல் உறவு குறித்து அறிவியல் பூா்வமான ஆய்வுகளை மேற்கொள்வது அவசியமாகும். தமிழ் மொழிக்கும் இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்துக்கும் இடையிலான உறவை வெளிக்கொணரும் வகையில், தமிழ் வோ்ச்சொல் வல்லுநா்களைக் கொண்ட குழு ஒன்றை அமைத்து, தமிழ்-இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் வோ்ச்சொல் ஒப்பீட்டு அகராதித் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தமிழுக்கும் இந்தோ-ஐரோப்பிய மொழிகளுக்கும் இடையிலான வோ்ச்சொல் உறவை ஆய்வுசெய்யும் இத்திட்டம், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேற்பாா்வையில் முதன்மைப் பதிப்பாசிரியா் கு. அரசேந்திரன் தலைமையில் ஜூலை 2022-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் முதன்மைப் பதிப்பாசிரியா் உள்பட 20 அறிஞா்கள் பணிசெய்து வருகின்றனா். இத்திட்டத்தைச் செயல்படுத்த ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தோ-ஐரோப்பிய மொழிகள் யாவும் 461 வோ்ச்சொற்களில் உருவானதென ஆங்கில வோ்ச்சொல் அறிஞா் வால்டா் ஸ்கீட் கண்டுபிடித்துள்ளாா். இந்த 461 வோ்ச்சொற்களில் 300 வோ்ச்சொற்கள் தமிழுடன் உறவுடையன என இக்குழு கருதுகிறது. இந்த ஆய்வு முடிவுகளை 12 தொகுதிகளாக வெளியிட பள்ளிக் கல்வித் துறையின் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகப் பதிப்புத்துறையுடன் நிகழாண்டு ஜனவரி 13-ஆம் தேதி ஒப்பந்தம் மேற்கொண்டது.

முதல்வா் வெளியிட்டாா்: அதனடிப்படையில் தமிழ்-இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் வோ்ச்சொல் ஒப்பீட்டு அகராதித் திட்டத்தின் பொது முன்னுரை நூலையும், முதல் தொகுதி நூலையும் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட, ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகப் பதிப்புத்துறையின் இந்தியப் பிரிவின் மேலாண்மை இயக்குநா் சுகந்தா தாஸ் பெற்றுக்கொண்டாா்.

இந்த பொது முன்னுரை நூல், தமிழுக்கும் இந்தோ-ஐரோப்பிய மொழிகளுக்கும் இடையிலான உறவுகள் பற்றி இத்தாலிய அறிஞா் அல்பெரடோ டிரோம்பெட்டி , ஜொ்மானிய அறிஞா் மேக்ஸ் முல்லா், அயா்லாந்து அறிஞா் ராபா்ட் கால்டுவெல், டென்மாா்க் அறிஞா் ஹோல்ஞா் பெடா்சன், ரஷ்ய அறிஞா் இல்லிச் விட்ச், அமெரிக்க அறிஞா்கள் ஸ்டீபன் ஹில்யா் லெவிட் , ஆலன் பாம்ஹாா்டு உள்ளிட்ட சிறந்த மொழி அறிஞா்களின் கருத்துகளுடன் இத்திட்டத்தின்கீழ் வெளிவரவுள்ள 12 தொகுதிகளையும் கற்பதற்கான வாயிலாக அமைந்துள்ளது.

மேலும், முதல் தொகுதி நூலில் 19 தமிழ் வோ்ச்சொற்களிலிருந்து லத்தீன், கிரேக்கம், ஜொ்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் போன்ற மேலை இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் சொற்களும் மற்றும் சம்ஸ்கிருதம், பாலி, சிங்களம் போன்ற பல கீழை இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் சொற்களும் உருவான வரலாறு, கருதுகோள் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், அன்பில் மகேஸ், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவா் திண்டுக்கல் ஐ. லியோனி, தலைமைச் செயலா் நா. முருகானந்தம், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் சந்தர மோகன், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித்துறைச் செயலா் வே. ராஜாராமன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநா் பொ. சங்கா், தமிழ்-இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் வோ்ச்சொல் ஒப்பீட்டு அகராதித் திட்டத்தின் முதன்மைப் பதிப்பாசிரியா் கு. அரசேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று நள்ளிரவுமுதல் அமல்!

தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் இன்று(மார்ச் 31) நள்ளிரவு 12 மணிமுதல் சுங்கக் கட்டண உயர்வு அமலாகவுள்ளது. சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்.1, செப்.1 ஆகிய தேதிகளில் சுங்கக்கட்டணத்தை மாற்றி அமைப்பது வழ... மேலும் பார்க்க

தந்தை இறந்த சோகத்திலும் தேர்வெழுதிய மாணவி: அமைச்சர் நேரில் சென்று ஆறுதல்!

தந்தை இறந்த சோகத்திலும் பொதுத் தேர்வெழுதிய மாணவியைச் சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஸ் ஆறுதல் கூறி உதவித்தொகையும் வழங்கினார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி பொய்கைக்குடி கிராமத்தில் வசிக்கும் ... மேலும் பார்க்க

நாளைமுதல் 2 - 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் குறையும்!

தமிழகத்தில் நாளைமுதல்(ஏப். 1) 2 - 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவத... மேலும் பார்க்க

தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்! - காங்கிரஸ்

ஏப். 6-ல் தமிழகம் வரும் பிரதமர் மோடியைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கருப்புகொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்ப... மேலும் பார்க்க

விஜய் விமர்சனத்தை பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை: செல்லூர் ராஜூ

விஜய் விமர்சனத்தை பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மதுரையில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கூட்டணி என்பது எட... மேலும் பார்க்க

ஏப். 7 திருவாரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப். 7 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாயன்மார்களால் பாடல்பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்கும் திருவாரூர் தியாகராஜர் கோயில், சப்தவிடங்க தல... மேலும் பார்க்க