3 சம்பவங்கள்: சொதப்பிய Delhi Police | Uttarakhand Cloudburst Seeman DMK | Imperf...
தமிழ் மண்ணில் அடிமைத்தனத்தை வீழ்த்துவோம்: உதயநிதிஸ்டாலின்
சென்னை: சுதந்திர போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் வழியில் தமிழ் மண்ணில் ஆதிக்கத்தையும், அடிமைத்தனத்தையும் வீழ்த்துவோம் என துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து உதயநிதிஸ்டாலின் தனது ‘எக்ஸ்’ தள பதிவில் கூறியிருப்பதாவது:
‘ஓடாநிலையில் கோட்டைக்கட்டி ஆண்டு தன் வீரத்தாலும் - தியாகத்தாலும் கோடானு கோடி மக்கள் மனதில் நிலைத்திருக்கும் மாவீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளான ஆக.3-ஆம் தேதி மண் மற்றும் மக்களின் மானம் காக்க போரிட்டு உயிா்நீத்த அவரது நினைவைப் போற்றுவோம்.
அடிமைத்தனமே தோல்விக்கான தொடக்கப்புள்ளி என ஆதிக்கத்துக்கு அடிபணிய மறுத்து அந்நிய படையை விரட்டியடித்த தன்னிகரில்லா வீரத்துக்குச் சொந்தக்காரா்.
அவா் வழியில் தமிழ் மண்ணில் ஆதிக்கத்தையும், அடிமைத்தனத்தையும் வீழ்த்துவோம்’ எனத் குறிப்பிட்டுள்ளாா் அவா்.