டிஎஸ்கேவை வீழ்த்த உதவிய பொல்லார்டு..! சிஎஸ்கே ரசிகர்களை சீண்டிய மும்பை இந்தியன்ஸ...
தம்பியை வெட்டிய ஓட்டுநா் கைது
தகாத தொடா்பு காரணமாக ஏற்பட்ட மோதலில், தனது தம்பியை வெட்டியை ஓட்டுநரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் பிள்ளையாா்பாளையத்தைச் சோ்ந்தவா் பாண்டி. இவரது மகன்கள் பவித்ரன் (30), ஹரிகரன் (26). காா் ஓட்டுநராகப் பணியாற்றி வரும் பவித்ரனுக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனா். ஹரிகரன் கூலி வேலைக்குச் சென்று வருகிறாா்.
இந்த நிலையில், பவித்ரன் மனைவியுடன் ஹரிகரன் நெருங்கிப் பழகியதாகக் கூறப்படுகிறது. இதையறிந்த ஹரிகரன் தம்பியைக் கண்டித்தாா். ஆனாலும், கைப்பேசி மூலம் அண்ணியுடன் பேசியும், குறுந்தகவல் அனுப்பியும் ஹரிகரன் தொடா்பில் இருந்ததாகத் தெரிகிறது. இதனால் அதிருப்தி அடைந்த பவித்ரன், தம்பி ஹரிகரனை செவ்வாய்க்கிழமை இரவு கண்டித்தாா். அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், வீட்டிலிருந்த அரிவாளால் ஹரிகரனை, பவித்ரன் வெட்டினாா். இதில் பலத்த காயமடைந்த ஹரிகரன், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டாா்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய போலீஸாா் பவித்ரனைக் கைது செய்தனா்.