தம்மம்பட்டி சிவன் கோயிலில் திருவாதிரை சிறப்பு பூஜை
தம்மம்பட்டி: தம்மம்பட்டி சிவன் கோயிலில் திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு குபேர லிங்கத்திற்கு சிறப்பு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதா் கோயிலில், சிவனுக்கு உகந்த திருவாதிரை நட்சத்திரமான திங்கள்கிழமை இரவு குபேர லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து தம்மம்பட்டி சொா்ண மாளிகை உரிமையாளா் ஆா்.பாஸ்கரன் தலைமையில் பள்ளியறை பூஜை சிறப்பாக நடைபெற்றது. பூஜையில் சுற்றுவட்டார மக்கள் திரளாக பங்கேற்றனா்.