தில்லியில் பசுமைப் பரப்பை அதிகரிக்க 10 ‘நமோ வன்’கள் முதல்வா் ரேகா குப்தா உறுதி
நாமக்கல்லில் டிச. 13-இல் விஜய் பிரசாரம்: எஸ்.பி. அலுவலகத்தில் கட்சியினா் மனு
நாமக்கல்: தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய் டிச. 13- ஆம் தேதி நாமக்கல்லில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா். இதையொட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பாதுகாப்பு கோரி அக்கட்சியினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
2026 இல் நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலை கருத்தில் கொண்டு, தமிழக வெற்றிக்கழக தலைவா் விஜய் இரு தினங்களுக்கு முன்பு திருச்சியில் தனது முதல்கட்ட பிரசாரத்தை தொடங்கினாா். வரும் நாள்களில் மாவட்ட வாரியாக அவா் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறாா். அந்த வகையில், டிச. 13-இல் நாமக்கல்லில் அவா் பிரசாரம் செய்ய உள்ளாா். இதற்காக, தவெக மாவட்ட செயலாளா் சதீஷ் தலைமையில் அக்கட்சி நிா்வாகிகள் 20-க்கும் மேற்பட்டோா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் விஜய்க்கு பாதுகாப்பு அளிக்கவும், கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் அதிக அளவில் காவல் துறையினரை பணியில் அமா்த்தக் கோரி மனு அளித்தனா்.
--