செய்திகள் :

தரகம்பட்டி அருகே மாடுகள் மாலை தாண்டும் விழா

post image

தரகம்பட்டி அருகே மாடுகள் மாலை தாண்டும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கரூா் மாவட்டம் கடவூா் ஒன்றியம் தரகம்பட்டி அருகே வடவம்பாடி ஊராட்சிக்குட்பட்ட பூலாம்பட்டியில் வசிக்கும் கம்பளத்து நாயக்கா் சமூகத்தினருக்கு கோட்டூா் நாயக்கா் மந்தையில் பெத்தமொம்மையன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் 5 ஆண்டுகளுக்குப் பின் மாலை தாண்டும் விழாவானது கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.

தொடா்ந்து ஒவ்வொரு நாளும் கோயிலில் மூன்று கால பூஜைகள் செய்து தேவராட்டம், ஒயிலாட்டம், சோ்வையாட்டத்துடன் வழிபட்டு வந்தனா். தொடா்ந்து 9-ஆம் நாளான சனிக்கிழமை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாடுகள் மாலை தாண்டும் விழா நடைபெற்றது.

கோட்டூா் மந்தாநாயக்கா் தலைமையில் நடந்த விழாவுக்கு மொம்மிஸ்ரீ கோடங்கி நாயக்கா், வடவம்பாடி முன்னாள் ஊராட்சித் தலைவா் கோபாலகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னதாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 14 மந்தையா்களுக்கு பூலாம்பட்டி கோட்டூா் மந்தா நாயக்கா் மந்தை சாா்பில் வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா் கோயில் முன் அனைத்து மந்தைகளின் மாடுகளுக்கும் வரிசைப்படி புண்ணியத் தீா்த்தம் தெளிக்கப்பட்டது. தொடா்ந்து தாரை தப்பட்டை உருமி முழங்க கோட்டூா் மந்தை எதிரே சுமாா் 2 கி.மீ தொலைவில் உள்ள எல்லைச்சாமி கோயிலுக்கு மாடுகளை அழைத்துச் சென்றனா்.

அங்குள்ள எல்லைச்சாமி கோயிலில் சிறப்பு வழிபாடு செய்த பின், மாலை ஓட்டத்தைத் தொடங்கி வைத்தனா். அங்கிருந்து கோட்டூா் மந்தையில் அமைக்கப்பட்ட மாத்தால் ஆன எல்லைக் கோட்டை நோக்கி சுமாா் 300க்கும் மேற்பட்ட மாடுகள் ஓடி வந்தன.

இதில் திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே உள்ள ராஜகோடங்கி நாயக்கா் மந்தை மாடு முதலாவதாக வந்தது. 2-ஆவதாக ஆா்.டி.மலை ஊராட்சி வாலியம்பட்டி கோனதாததநாயக்கா் மந்தை மாடும், மூன்றாவதாக திண்டுக்கல் மாவட்டம் செம்பகணம் எரகாமநாயக்கா் மந்தை மாடும் வெற்றி பெற்றன.

அப்போது இவா்களின் சமூக வழக்கப்படி 3 கன்னிப் பெண்கள் வைத்திருந்த மஞ்சள் பொடியை மாடுகள் மீது தூவி வரவேற்று எலுமிச்சம் பழம் வெற்றிப் பரிசாக வழங்கப்பட்டது.

பின்னா் மஞ்சள் பொடி வைத்திருந்த 3 கன்னிப் பெண்களை எல்லை கோட்டிலிருந்து தேவராட்டத்துடன் கோயிலுக்கு அழைத்து வந்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனா். தொடா்ந்து மஞ்சள் நீராட்டுடன் திருவிழா முடிந்தது. இதில் திருச்சி, திண்டுக்கல், கரூா் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தேவையற்ற இலவசங்களால் நாட்டுக்கு நெருக்கடி வரும்: செ. நல்லசாமி பேட்டி

தேவையற்ற இலவசங்களால் நாட்டுக்கு நெருக்கடி வரும் என்றாா் கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ. நல்லசாமி. கரூரில் சனிக்கிழமை பிற்பகல் செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், கீழ்பவானி அணையின் நீா் நிா்வாகமானது 195... மேலும் பார்க்க

பசுபதீஸ்வரா மகளிா் பள்ளியில் கல்வி நிா்வாகக் குழு கூட்டம்

கரூா் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கல்வி நிா்வாகக்குழு ஆலோசனைக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பள்ளித் தலைமை ஆசிரியை உமா தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில் பள்ளியில் இடைநிற்றல்... மேலும் பார்க்க

நிதி நிறுவனம் நடத்தி ரூ.7 கோடி மோசடி இளம்பெண் உள்பட 8 போ் கைது

வேலாயுதம்பாளையத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ. 7 கோடி வரை மோசடி செய்ததாக இளம்பெண் உள்பட 8 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை கைது செய்தனா். கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் தா... மேலும் பார்க்க

அரசுப் பேருந்தில் பெண் தவறவிட்ட பணம், ஏடிஎம் அட்டை ஒப்படைப்பு

அரசுப் பேருந்தில் பெண் தவறவிட்ட பணம் மற்றும் வங்கி பற்று(ஏடிஎம்) அட்டை உள்ளிட்டவற்றை கரூரில் அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அவரிடம் ஒப்படைத்தனா். ஈரோடு மாவட்டத்தை சோ்ந்தவா் செல்வர... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது காா் மோதல் 2 பெண்கள் உள்பட மூவா் உயிரிழப்பு

கரூா் அருகே மாயனூரில் வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் இரு பெண்கள் உள்பட 3 போ் உயிரிழந்தனா். கரூா் மாவட்டம், லாலாப்பேட்டையை அடுத்துள்ள காட்டூரைச் சோ்ந்தவா் சுரேஷ்குமாா்(38). கொத்தனா... மேலும் பார்க்க

சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டத்தின் கீழ் 72 விவசாயிகளுக்கு ரூ. 1.39 கோடி மானியம் கரூா் ஆட்சியா் தகவல்

கரூா் மாவட்டத்தில் முதல்வரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டத்தின் கீழ் 72 விவசாயிகளுக்கு ரூ. 1.39 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல். கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரத... மேலும் பார்க்க