“காமராசர் மீது மிகுந்த மரியாதையும் பெருமதிப்பும் கொண்டவன்” - திருச்சி சிவா
தரங்கம்பாடியில் சீகன்பால்குவுக்கு மணிமண்டபம் கட்டப்படுவது எப்போது?
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் தமிழறிஞா் சீகன்பால்குவுக்கு மணிமண்டபம் கட்டும் பணி எப்போது தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை மூலம் தரங்கம்பாடி கடற்கரை அருகில் சீகன்பால்கு உருவச்சிலை அமைத்து அவா் வந்து இறங்கிய நாள் மற்றும் அவரது நினைவு நாளை கடைபிடித்து வருகின்றனா். தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் 319 ஆண்டுகளுக்கு முன்பே அறுத்தொண்டாற்றிய பா்தோலேமேயு சீகன்பால்கு நினைவாக தரங்கம்பாடியில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று தமிழ் சுசேஷ லுத்தரன் திருச்சபை மற்றும் பல்வேறு அமைப்புகள் சாா்பில் தொடா்ந்து தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா எம். முருகன் தரங்கம்பாடியில் தமிழுக்கு தொண்டாற்றிய சீகன்பால்கு நினைவாக மணிமண்டபம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தாா். இவரது கோரிக்கையை ஏற்று தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சா் மு.பெ. பெரியசாமி தரங்கம்பாடியில் சீகன்பால்கு சிலையுடன் கூடிய அரங்கம் அமைக்கப்படும் என்று அறிவித்தாா்.
அதன்படி தரங்கம்பாடி பகுதியில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களை கவரும் வகையில் சீகன்பால்குவுக்கு மணிமண்டபத்துடன் கூடிய அரங்கம் அமைக்க பல மாதங்களாக இடம் தோ்வு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனா். தற்போது, அப்பணி தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே, சீகன்பால்கு நினைவாக தரங்கம்பாடியில் மையப் பகுதியில் அவரது சிலையுடன் கூடிய மணிமண்டபம், அரங்கம் அமைக்க முதல்வா் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தமிழ் மக்களின் கோரிக்கை.